கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று ஏன் கூறுகிறார்கள் தெரியுமா?

கடுகு சிறுத்தாலும்...
கடுகு சிறுத்தாலும்...
Published on

னெனில், கடுகு - என்ற பெயரே அதன் காரத்தைக் குறித்து இடப்பட்டதுதான்!

காரத்தில் கடுக்கக் கூடியது - கடுகு!

கடு > கடுகு என்றால் காரமுள்ளது எனப்பொருள். இது மிகுதிக் கருத்தின் அடிப்படையில் அமைந்தது. அதனால் தான் 'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது ' என்ற பழமொழி பிறந்தது.

கடு, கடி, கரி காரம் ஆகிய சொற்கள் மிகுதி, வன்மை, கடுமை, உறைப்பு, சினம் போன்ற பொருள் குறிப்பதாகும்.

கள் > கடு - என்பது மிகுதிப் பொருள் குறிப்பது.
கடு = கடுமை, மூர்க்கம் ( ferocity,  intense ).
கடு > கடினம் = வன்மை, வலியது.
கடு > கட்டம் ( கஷ்டம்).

உடலின் வலி அதிகமாக இருந்தாலும் கடுக்கிறது என்போம். கோபம் அதிகமாக இருந்தாலும் கடுப்பாகி விடுவோம். காரச்சுவை மிகினும் கடுப்புதான்!

கடு > கடி > கரி > காரம் = உறைப்பு, மிகுதி.
கடு என்னும் சொல்லைப் போலவே அதன் திரிவுகளான கடி, கரி என்பவற்றிற்கும் 'மிகுதல்' - என்பதே அடிப்பொருளாம். உப்புச்சுவை மிகுதியானால் உப்புக்கரிக்கிறது எனச் சொல்வதை நோக்குக.

அடுத்து, கரி என்னும் வினைப்பகுதி, முதனிலை திரிந்து விகுதியேற்கும் முறையில் 'காரம்' என்ற தொழிற்பெயராகும்.
கரி > காரம்.
கரிப்பு > காரம்.
 
கடுத்தல் = மிகுதல்.
கடுத்தல் = விரைதல், விரைந்தோடுதல்.
கடு > கடுகு > கடுக்கம் = விரைவு.
கடு > காடு = மிகுதி.
கடு > காட்டம் = கடும்புளிப்பு.
கடு > காடி = புளிப்பு, புளித்த கள், புளித்த கஞ்சி, ஊறுகாய்.
கடுகு > கடுகம்.

இதையும் படியுங்கள்:
சத்துள்ள சணல் விதைகளைப் பற்றித் தெரியுமா?
கடுகு சிறுத்தாலும்...

திரிகடுகம் – என்னும் நூல்: மூன்று காரமுள்ள மருந்துப் பொருட்களான சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் 'திரிகடுகம்' எனப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com