
அழகிய காட்சிகளைத் தேடிப் போய் போட்டோ எடுத்து பத்திரிகைகளுக்கும், புகைப்பட போட்டிகளுக்கும் அனுப்புவது அவனது பொழுதுபோக்கு… தொழிலும் கூட. அவனுக்கு ”நம்ம எடுக்குற ஸ்டில் முதல் பரிசு வாங்கணும்,-ன்னு ஒரே இலட்சியம்.
பவானிசாகரிலிருந்து….இயற்கை எழில் கொஞ்சும் தெங்குமரஉறடாவுக்குள் நுழைந்தார்கள். காட்டுக்குள் நெடுந்தூரம் சென்று ”காமிராவை சரியான முறையில் வைத்து விட்டு ஓர் புதர் மறைவில் காத்திருந்தார்கள்.
அழகிய பூச்செடியில்….. ஒரு பூவில்….வண்ணத்துப்பூச்சி ஒன்று அமர்ந்து தேனை உறிஞ்ச துவங்கியது. அந்தக்காட்சி அப்படியே காமிராக் கண்ணில் சிக்கியது.
அப்பாடா, இதுவாவது கிடைத்த சந்தோஷத்தில் காரில் திரும்பினார்கள்.
மறுநாள் அதிகாலை பனிபொழிந்து கொண்டிருந்தது. வீட்டை விட்டு வெளியே வந்தவன் கண்களில் சிக்கியது ஒரு காட்சி…. ”ஒரு அழகிய பூச்செடி….அதில் தேனையள்ளித் தரும் மலர்கள் பூத்து அழகாக காட்சியளித்தன. ஒரு பூவில்….. ஒரு வண்ணத்துப்பூச்சி… தேனை உறிஞ்சி கொண்டிருந்தது.“ உடனே வீட்டுக்குள் ஓடிப்போய் கேமராவில் கிளுக்கினான்.
ஏற்கனவே காட்டுக்குள் எடுத்த சூம் வைத்து எடுத்த போட்டோவையும். வீட்டிற்கு அருகில் சாதாரண கேமிராவில் போட்டோவையும் பிரிண்ட் எடுத்து ”புகைப்பட போட்டிக்கு அனுப்பி வைத்தான்.
போட்டியின் முடிவில்…..
வீட்டு வாசலுக்கருகிலேயே உள்ள பூச்செடியில் வண்ணத்துப்பூச்சி தேனருந்தும் காட்சிதான்“ முதல் பரிசை தட்டிக்கொண்டது!