“ஹலோ... குட் மார்னிங். நாந்தான் சுந்தரேசன். சுந்தான்னுதான் கூப்புடுவாங்க. நீங்கதானா மகேஷ்? உங்களை... உன்னை... நீன்னே கூப்படலாமில்ல? வயசுல என்னைவிடச் சின்னவந்தானே? நீயும் என்னை சுந்தான்னே கூப்படலாம். நீதான் உடுமலைப்பேட்டையா? ஒண்ணு ரெண்டு தடவ உங்க ஊருக்கு வந்திருக்கேன். நான் கும்மோணம் பக்கத்துல திப்பிராஜபுரம். ரமணி ஃப்ரெண்டு. காத்தாலதான் செங்கோட்டால வந்தேன்...”மூச்சுவிடாமல் பேசிக்கொண்டே போவார். அதுதான் சுந்தரேசன். முதல் முறையாக அவரைப் பார்த்தபோதே பிடித்துப் போனது. 25 வயது. 6 அடி உயரத்திற்கு இன்னமும் ஒல்லியாகத் தெரிவார். தூக்கி படிய வாரிய தலை. அடர்த்தியான ஹேண்டில்பார் மீசை. எப்போதும் சிரித்த முகம். தமாஷான பேச்சு. சட்டென யாரோடும் ஒட்டிக்கொண்டுவிடுவார். கும்பகோணத்தில் ஒரு கம்பெனியில் மார்கெட்டிங் வேலை. சென்னைப் பகுதியை விரிவாக்க 6 மாதம் சென்னைக்கு மாற்றாலாகி வந்திருந்தார். ரமணியின் பள்ளி நண்பர் என்பதால் அவ்வப்போது திருவல்லிக்கேணியில் எங்கள் அறைக்கு வருவார்.“எங்க கம்பெனில சோப்பும் பண்றாங்க. சாட்டிலைட்டும் பண்றாங்க. கூடவே ஃபேனும் பண்றாங்க. பண்றதையெல்லாம் வித்தாகணுமே. அதுக்குதான் என்ன மாதிரி. தோ... இன்னிக்குக்கூட ரெண்டு கல்யாண மண்டபம், ஒரு சினிமா தியேட்டர்... போய் ஃபேனுக்கு ஆர்டர் புடிக்கணும். சேல்ஸ்மேன் கூடப் போய் அவனுக்கு சப்போர்ட் பண்ணணும்” என்று ஒருநாள் சொல்லிவிட்டுப் போனார். அன்று மாலை அறையில் ஒரே சிரிப்போ சிரிப்பு.“இன்னிக்கு என்னாச்சு தெரியுமா? இந்த சேல்ஸ்மேன்கூட தியேட்டருக்கு போனேன். 16 ஃபேன் வித்திருக்கான். எல்லாம் ஃபிட் பண்ணியாச்சு. ஆனா அந்த ஃபேன் கப் இருக்கு பாருங்க... அது அத்தனையும் ஃபிக்ஸ் பண்ணும்போது என்னமோ க்ராக் ஆயிடுச்சாம். அந்த தியேட்டர் மேனேஜர் கெடந்து குதிக்கிறான். எலெக்ட்ரீசியனா நக்கலா சிரிக்கிறான். முட்டை ஓடு மாதிரி இருக்கு சார்ங்கறான். சேல்ஸ்மேன் பரிதாபமா நிக்கறான்””அப்பறம்? ஆர்டர் கேன்சலா?”“இரு... சொல்றதைக் கேளு... நான் என்ன பண்ணேன்... கையோட கொண்டு போயிருந்த ஒரு ஃபேன் கப்பை எடுத்து ‘சார்... எதோ ஒரு பேட்ச் அப்படி ஆயிடுச்சு போல.. இங்க பாருங்க’ன்னு கைல இருந்த கப்ப நசுக்கினா அதுவும் பொலபொலன்னு நலுங்கு அப்பளமாட்டம் நொறுங்கிப் போச்சு”.“அது சரி.... மூஞ்சி பேஸ்த் அடிச்சுருக்குமே. நிச்சயமா இன்வாய்சைக் கிழிச்சு குப்பைல போட்டிருப்பானே”“விடுவமா அப்பிடி? ரியாக்ட் பண்ணாம மூஞ்சியை மாத்திக்காம உடனே டக்குனு ப்ளேட்ட மாத்தி ‘சார். பாருங்க இதுவும் அந்த பேட்ச்தான். உங்களுக்கு ப்ரூவ் பண்ணவே கொண்டு வந்தேன். அடுத்த பேட்ச்ல சரிபண்ணி கப்பெல்லாம் இப்ப ஓகே. அடுத்த வாரம் நானே உங்களுக்கு எல்லா கப்பையும் மாத்திடறேன்’னு ஒரே அடி அடிச்சேன். மாத்து கப் வந்தப்பறம் பில் பாஸ் பண்றேன்னுட்டான். என்ன பண்றது? வாயிருந்தாத்தான் பொழப்பு” என்றார். அதுதான் சுந்தரேசன். அன்று நாங்கள் நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருந்தோம். எல்லோரையும் மனது நோகாமல் சிரித்தபடியே கிண்டல் செய்வார். எல்லோருமே அதை தமாஷுக்கு என்று எடுத்துக்கொண்டு பொதுவாக யாரும் அவரோடு சண்டை போடுவதில்லை. ஆனாலும் அவரை மடக்க ஒரு ஆளில்லையே என்று அவர் இல்லாதபோது பேசிக்கொள்வோம்.இன்னொரு நாள். காலை டீ குடிக்கப் போகும் வழியில் மளிகைக்கடைக்காரரிடம் தர்க்கம்.“என்னங்க இது அநியாயம்? நேத்து சாயந்திரந்தானே இந்த பேஸ்டை உங்ககிட்ட வாங்கினேன்? கார்த்தால பிதுக்கறேன் பிதுக்கறேன்.. வெறும் காத்துத்தான் வருது. உள்ள பேஸ்டே இல்லையே...ம்ம்ம்”“அப்படியா? இருக்காதே... கொண்டாங்க பார்ப்போம்”“நானே சந்தேகத்துக்கு பார்சாதி கோயிலுக்குப் போய் யானை காலுக்கடில போட்டு மிதிக்கவெச்சு பார்த்தேன். அப்பக்கூட ஒரு சொட்டுப் பேஸ்டு வரலயே..ம்ஹூம்”கடைக்காரரும் வாசலில் நின்றிருந்த சிலரும் கடகடவெனச் சிரித்துவிட்டார்கள்.“சரிங்க. அதெல்லாம் வேண்டாம். சில சமயம் பேக்கிங்ல அப்படி ஆகறதுண்டு. நமக்கென்ன தெரியும்? உங்கள மாதிரி வாடிக்கை வந்து சொன்னாத்தான் தெரியுது. நான் வேற பேஸ்ட் தரேன். யானையெல்லாம் கூட்டி வராதீங்க” என்று சிரித்தபடியே வேறு பேஸ்ட் தந்தார். திருவல்லிக்கேணி வீதிகளில் இரவு நேரங்களில் பெருச்சாளிகளின் நடமாட்டம் சாதாரணமாக இருக்கும். ஒருமுறை ஸ்டார் தியேட்டரில் இரவுக் காட்சி பார்த்துவிட்டுத் திரும்பும்போது ஒரு சந்துக்குள் பூனை அளவுக்குப் பெரிய பெருச்சாளி ஒன்று வேகமாக வந்து எங்கள் எதிரே நின்றுவிட்டது. முறைத்துக்கொண்டு நின்ற மாதிரி இருந்தது. கொஞ்சம் பயந்துதான் போனோம். மறுநாள் அதைப்பற்றி கார்ப்பரேஷனில் புகார் செய்யவேண்டும் என்று சொன்னார்.அடுத்தநாள் நிஜமாகவே கார்பொரேஷன் அலுவலகத்திற்கு என்னையும் அழைத்துக்கொண்டு போனார். அங்கிருந்த சுகாதார அதிகாரியைப் பார்த்தோம்.“சார்... நாங்க பார்சாதி நாயுடு தெருல இருக்கோம். ராத்திரியானா பெருச்சாளி தொல்லை தாங்க முடியல. நேத்திக்கு சினிமா பாத்துட்டு வரோம்... அந்த சந்து முனைல பெருச்சாளி எல்லாம் பந்தல் போட்டு மைக் செட் வெச்சு பொதுக்கூட்டம் போட்டிருந்தது சார்.. கொஞ்சம் நீங்கதான் கவனிக்கணும்”அவர் ஒருமாதிரியாகப் பார்த்தபடியே “ம்ம்.. அப்பறம்? ஊர்வலம் வேற போச்சா? சரி.. புகார் எழுதிக்கறேன். நான் பார்க்கறேன். வோட்டர் கார்ட் அல்லது ரேஷன் கார்ட் எதாவது காமிங்க” என்றார்.“இதேதான் சார்... நானும் அந்தப் பெருச்சாளிகிட்ட பேர் என்ன, ரேஷன் கார்டு இருக்கான்னு கேட்டேன் சார். அதுகிட்ட எதுவுமே இல்லை சார்” என்றார் சுந்தா.எனக்கோ அதிர்ச்சி. ஆனால் அடுத்த 10 நிமிடங்களுக்கு அங்கு ஒரே சிரிப்பு. “போங்க சார்... போங்க. நாங்க பார்க்கறோம்” என்று அந்த அதிகாரி அனுப்பி வைத்தார். ரசாபாசம் ஆகாமல் முழுசாக வந்தோமே என்று எனக்கு மூச்சு வந்தது. அவ்வப்போது தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கு இரண்டு மூன்று வாரங்கள் டூர் போய்வருவார். அந்தந்த ஊர்களில் பிரபலமாகக் கிடைக்கும் தின்பண்டங்கள் ஏராளமாகக் கொண்டுவருவார். சாத்தூர் சேவு, திருச்சி மாப்பிள்ளை விநாயகர் கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு, திண்டுக்கல் சில்லுக்கருப்பட்டி, வில்லிப்புத்தூர் பால்கோவா, வத்திராயிருப்பு வாழைப்பழம் என்று என்னென்னமோ கொண்டுவருவார். மெஸ் நடத்தும் மாமி வீட்டுப் பையன்கள், எங்கள் நண்பர்கள் என்று கொண்டுவந்ததெல்லாம் தீரும்வரை இரண்டு நாட்களுக்கு அறையில் போக்குவரவு நெரிசலாக இருக்கும். சுந்தாவுக்கு காபி என்றால் அது கும்பகோணம் டிகிரி காப்பிதான். அதுவும் அவர் வீட்டில் போடும் காப்பிதான் உசத்தி; மற்றதெல்லாம் கழுநீர்க்கு சமம் என்ற உறுதியான தீர்மானம் கொண்டவர். அவர் வீட்டுக் காபி போல சென்னையில் எங்காவது கிடைத்தால் சென்னை தொலைக்காட்சி நிலையம் எதிரே கூவத்தில் குதித்து நீந்தத் தயார் என்பார். திருவல்லிக்கேணியின் வீதிகளில் உள்ள அத்தனை டீக்கடைகளிலும் அவர்கள் போடும் காபியில் ஏதாவது குறை சொல்லுவார். கடைக்காரர்களும் சிரிப்பார்களே தவிர பெரிதாக கண்டுகொள்ளமாட்டார்கள். அவர்களும் இவரைப் போல ஆயிரம் பேர்களைப் பார்த்தவர்கள்தானே. பைகிராஃப்ட்ஸ் ரோடில் புதியதாக ஒரு டீக்கடை திறந்து ஒருவாரம் போல ஆகியிருந்தது. ஒரு ஞாயிறு மாலை அங்கே போனோம். காபி ஆர்டர் பண்ணிவிட்டுப் பேசிக்கொண்டிருந்தோம். சர்வர் காபி கொண்டு வந்து வைத்துவிட்டு பக்கத்து மேசை அருகே நின்றிருந்தார். காபியைக் குடித்துவிட்டு சுந்தா அவரைப் பார்த்து,“ஆஹா... அருமையான காப்பி. டேஸ்ட் வித்தியாசமா இருக்கு”“ரொம்ப தேங்க்ஸ் சார்”“ஏன்னா... இங்க எப்பவும் கழுதை மூத்திரம் மாதிரி இருக்கும். இன்னிக்கு குதிரை மூத்திரம் மாதிரி இருக்கு” என்றார் கொஞ்சம்கூட சிரிக்காமல்.ஆனால் அந்த சர்வர் மற்ற கடைக்காரர்கள் மாதிரி இல்லை. அவரும் பதிலுக்கு உடனே “எனக்கென்ன சார் தெரியும்? நீங்க பல இடத்துல பலது குடிச்சுருப்பீங்க” என்றார் சிரிக்காமலேயே.எங்களுக்கோ சிரிப்பு தாங்காமல் புரையேறிவிட்டது. சுந்தாவையும் கவிழ்க்க ஒரு ஆள் இருக்கிறார் என்று ஒரு அல்ப சந்தோஷம் வேறு. ஆனாலும் சுந்தா அசரவேயில்லையே. உடனே பார்வையில் ஒரு வாத்சல்யத்துடன் கேட்டார்.“நீங்க கும்மோணமா?”“ஆமாம். சாமிமலை”“அதான். நானும் திப்ராபுரந்தான். இன்னொரு காபி கொண்டாங்க” என்றார். அதுதான் சுந்தரேசன்.எல்லாம் சில மாதங்கள்தான். சுந்தா மீண்டும் கும்பகோணத்துக்கே போகப்போவதாகச் சொன்னார். கம்பெனி விரிவுபடுத்தி வேறு ஏதோ புதிய பொருட்களுக்கு மார்கெட்டிங் செய்யச் சொல்லிவிட்டார்களாம். அவ்வப்போது சென்னை டூர் இருக்கும் என்றார்.சில ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. “அட.. சுந்தா !! நீங்க எங்க இங்க?”“பார்ரா !! நீ என்ன பண்ற கோயம்புத்தூர்ல? நான் இன்னும் அதே வேலைலதான் இருக்கேன். இங்க ரெண்டு மூணு கல்யாண மண்டபம், ஆஸ்பத்திரியெல்லாம் போகணும். ஃபேன் ஆர்டர்”“இப்பவாவது கப்பு உடையாம ஸ்ட்ராங்காப் பண்றீங்களா?”“நீ வேற... முன்னயாவது பேப்பர் மாதிரி இருந்தாலும் ப்ளாஸ்டிக்ல பண்ணினாங்க. நானும் ரொம்ப அழுத்தி நசுக்காம காமிச்சு வித்தேன். இப்பல்லாம் பேப்பர்லயேதான் பண்றாங்க போல இருக்கு. நான் அதைப்பத்திப் பேசறதே இல்லை. அவங்களா ஆரம்பிச்சாலும் டபிள் பால் பேரிங், ஹெவி மோட்டார்னு பேச்சை மாத்திவிட்டுடறேன்” என்றார் வழக்கம்போல சிரிப்புடன்.“அப்பறம்.. ஊர்ல எல்லாரும் சௌக்யமா?”“ஆ... அதக் கேக்காத. போன வருஷம் மழைல வீட்ல உத்தரம் சரிஞ்சு அம்மா, அப்பா, பாட்டி எல்லாம் பெருமாள் திருவடி”“அய்யோ... சாரி““என்ன பண்றது? மழைக்கப்பறமா எடுத்துக்கட்டணும்னு கொஞ்சம் பணம் சேத்து வெச்சுருந்தேன். அதுக்குள்ள.... ம்ம்.. இப்பக் கட்டியாச்சு. மாமனார் மாமியாருக்கு கண் தெரியாது. கிராமத்துல இருந்து எல்லாரையும் கூட்டி வந்து என்னோட வெச்சுண்டிருக்கேன். முன் கட்டுல அத்திம்பேர் 20 பசங்களுக்காக வேத பாடசாலை நடத்தறார். நான் பாதி டொனேஷன் பாதின்னு அதுவும் ஓடறது. லைஃப் அதுபாட்டுக்குப் போறது” என்றார். அதுதான் சுந்தரேசன். (தொடரும்)