

முதல் நாள் இரவே ஹெட்மாஸ்டர் அனைத்து பணியாளர்களுக்கும் போன் பேசினாா்.
"நாளை காலை மாவட்ட ஆட்சியர் பள்ளி காலை உணவுத்திட்டம் ஆய்வாம், அனைவரும் ஏழு மணிக்கே வரவேண்டும்," என்றாா்.
கல்வி அதிகாாி, வட்டாச்சியர், பிடிஓ, நிருபர், என அனைவருக்கும் தகவல் பறந்தது.
"சாா் நாளைக்கு லீவு வேணும் சாா், கொழுந்தியாளுக்கு பிரசவம்."
அடுத்ததாய் கே எம் சாரோ, "என்னோட மாமியாருக்கு ஹாா்ட் ஆப்பரேஷன் நலம் ஹாஸ்பிட்டல்ல. லீவு..." என இழுத்தாா்.
ஹெட்மாஸ்டரின் கோபம் அதிகமானது.
"அதெல்லாம் தொியாது. நாளை யாருக்கும் லீவு இல்ல," என்றதோடு, அவரின் மனைவி குறுக்கிட்டாா். "ஏங்க நாளைக்கு உங்க அப்பா திதி. அய்யர் ஏழு மணிக்கே வந்துவிடுவாரே" என்றார்.
"ஆமாம் நீ வேற... நேரங்கெட்ட நேரத்தில... அய்யரை போகச்சொல்லிடு, அரிசி பழம் காய்கறி வெல்லம் இதையெல்லாம் வச்சு எமகண்டம் கழிச்சு பக்கத்து வீட்டு பசுமாட்டுக்கு வை" என்றாா்.
இரவெல்லாம் தூக்கம் போனது.