தொடர்கதை: Mr.வேம்பு - அத்தியாயம் 2

Mr.Vembu-2 | Couple and old couple
Mr.Vembu-2 | Couple and old coupleAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

Mr.வேம்பு - அத்தியாயம் 2

பெரியவர் தொடர்ந்து பேசினார்... "முதலாளி தன் நண்பரிடம், தான் எழுதிய ‘உயிலை’, எடுத்து வரும்படி வேண்டினார். அது முதலாளியின் தனி அறை. பொதுவாக அங்க யாரும் போவது இல்லை. நண்பர் சென்றார். சுவற்றிலேயே ஒரு சிறு சேஃப்டி லாக்கர் இருந்தது. அதில் இருந்து உயிலை எடுத்தார். அதை அனைவர் முன்னிலையிலும் படிக்கச் சொன்னார். அனைவரின் முகமும் செக்கச் சிவந்தது. கோபத்தில் அவர்களின் பெருமூச்சு அந்த அறையையே சூடாக்கியது. போர்வை போத்திக்கொண்டிருந்த முதலாளியே, சற்று வியர்ப்பதை உணர்ந்து, போர்வையை விலக்கிக்கொண்டார்.

அந்த உயிலில் தன் மகளை எனக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்றும் இருக்கும் அனைத்து சொத்துக்களும் அவர் மகளுக்கு. அதாவது என் மனைவிக்குத்தான் சொந்தம்... என்றும் எழுதி விட்டார்.

வந்தவர்கள், நொந்து திரும்பியபோது அவர்களைக் கைகொட்டி அழைத்தார். தன் கழுத்தில் இருந்த செயினைக் கழட்டி என்னிடம் கொடுத்தார். அதை தன் அன்பு மகள் கழுத்தில் கட்டுமாறு வேண்டினார். உற்றார், உறவினர், நண்பர் கூடியிருக்க எங்கள் திருமணம் நடைபெற்றது. எனக்கு மாமியார் கிடையாது. முதலாளிக்கு அந்தப் பாக்கியம் இல்லை. அவர்கள் முதலாளியின் அறுபதாவது வயதில், இறந்துவிட்டார்கள். என்னை, அவர் பெண்ணை, ‘கண்போல்’ பார்த்துக் கொள்ளுமாறு கைகூப்பி கேட்டு, வணங்கினார்.”

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com