தொடர்கதை: Mr.வேம்பு - அத்தியாயம் 7

Mr.Vembu-7 | Couple marriage
Mr.Vembu-7 | Couple marriageAI Image
முருகன்

ஆசிரியர் இயற்பெயர் ஜி.சுப்பிரமணியன். வயது 73. சுமார் நாற்பது ஆண்டுகளாக சிறார்களுக்கு சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் எழுதி அவைகள் பல சிறார் இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. அது தவிர அன்னாரின் ஏழு கதை புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன இதில் இரண்டு இந்தி சிறார் கதை புத்தகங்கள். ஆசிரியர் அவர்கள் கீழ்கண்ட யு டியூப் சேனல்களையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 1. Suppinithathasiruvarkathaigal 2. Hindi stories – children – suppinidhadha 3. Mannaimurugan touring talkies

Updated on
Kalki Strip
Kalki Strip

Mr.வேம்பு - அத்தியாயம் 7

தலைவர், வேம்புவையும், அழகேசனையும் தனியாக அழைத்தார்.

“ஏன் அழகேசா, இவரு இறந்துபோன உங்க கிராம மிராசுதார் மருமகன்தானே?”

அழகேசனும், “ஆமாம். வேம்பு என் உயிர் நண்பனும் கூட” என்றார்.

“சரி.. இந்த மணப்பெண், அவருக்கு எப்ப மகளாயிற்று?”

“தலைவரே, அவங்க மனைவியைப் பார்த்தீங்களா. படுத்தபடுக்கையா ஸ்டிரச்சரில். அப்படியே ஒரு ஆம்புலன்சும் நிக்குது, பாருங்க. அவர் மனைவிக்கு, முதுகு தண்டு வடத்தில, பெரிய ஆபரேஷன் ஆகி, அது பெஃயிலாயிடுத்து. எவனோ பெஃயிலாபோன பயல் பணம் கொடுத்து, டாக்டர் ஆகி, ஆபரேஷனும் செஞ்சு, லட்சக்கணக்குல பணத்தையும் பிடிங்கி விட்டுட்டான். இவருக்கும் முடியலே. அதனால, யாரோ நண்பர்கள் கூறவும், இந்தப் பெண்ணை, தன் பெண்ணாக, ‘தத்து’ எடுத்துக்கொண்டு விட்டார். இப்ப இந்தக் கிராமத்துக்கே சாப்பாடு முழதும் இவர் செலவுதான். அந்த பெண் மீது அத்தனை பாசம்."

மேடையில் ஒரு ஓரத்தில் ஸ்டிரெசரில் படுத்திருந்த வேம்புவின் மனைவியும் ‘ஆமாம்’ என்று தலை அசைத்து, அழகேசன் கூறியதை கன்ஃபார்ம் செய்தார்கள்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com