
“ஹலோ! டாக்டர் அப்பா எப்படி இருக்காரு?”
“ஹீ இஸ் சம்வாட் ரெஸ்பாண்டிங் டு தி மெடிசின்” ஆனா இன்னும் கொஞ்ச காலம்தான், இப்ப கடைசி ஸ்டேஜ்”
"அப்படின்னா எவ்வளவு வருஷம் அல்லது எவ்வளவு மாசம் டாக்டர்?”
“எப்படியும் ஒரு மூணு மாசம்!”
“டாக்டர் நாங்க அவரை வீட்டுக்கு அழைச்சுட்டு போகலாமா?”
“கட்டாயம் இரண்டு நாள் அப்சர்வேஷனில் வைத்திருந்துவிட்டு அப்புறம் அவரை இங்கிருந்து கூட்டிக்கிட்டு போங்க” தாமஸ் அப்படியே சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தான். சிறிய மௌனம் நிலவியது அங்கு.
தாமஸின் அப்பா ராய், படித்தவர் நல்ல வேலையிலும் இருந்தவர். அரசாங்க கல்லூரியில் ஆங்கிலப் புரபொசராகப் பணியாற்றியவர். அவரது மனைவி ஜெனி ராய், இவரை மாதிரியே படித்த பெண். பள்ளியில் ஸைன்ஸ் டீச்சராகப் பணியாற்றியவர். அவர்களுக்குத் தாமஸ் ஒரே மகன். அவர்கள் தாமஸை அதிகம் செல்லம் கொடுத்து வளர்த்தனர். அவன் என்ன கேட்டாலும் வாங்கித் தருவது, அவன் மனதில் நினைத்தாலே இவர்கள் அவன் நினைப்பதை வாங்கி அவன் கண்முன் நிறுத்துவர்.