
ஐயோ...!!
அய்யோ…!!
அம்மா...!!
அப்பா…!!
அரசு அலுவலகங்களில் ஒரு ஆவணம் பெற வேண்டும் என்றால் படாதபாடுத்தான்.
எனக்கு வயது 63. சிங்கில். என் அண்ணன் வெளிநாட்டில் ஆராய்ச்சி செய்துவந்தார். அவன் என்றால் எனக்கு உயிர். பார்த்து 2 வருடங்கள் ஆகிவிட்டன. எனக்கு பணம் இல்லை. அதைப்பற்றி பிறகு யோசிக்கலாம்.
முதலில் பாஸ்போர்ட் வாங்க வேண்டும். பாஸ்போர்ட் ஆபிசு போனேன். என்னை ஆதார் கார்டு மற்றும் வோட்டர் ஐடி கேட்டார்கள். இது வரை இந்த நிலையைச் சந்திக்கவில்லை.
சரி.. ஆதார் அட்டை மற்றும் வோட்டர் ஐடி வாங்க தீர்மானித்தேன். தாலுகா அலுவலகத்தில் ஒரு விண்ணப்பம் கொடுக்கச் சொன்னார்கள். ஆதார் அட்டை வேண்டும் என்றால் வோட்டர் ஐடி வேண்டும் என்று கண்டிப்பாக சொன்னார்கள். பல ஆபிசர்களைச் சந்தித்து கடைசியில் வங்கி கணக்கு புத்தகம் வேண்டும் என்றார்கள்.