சிறுகதை: ஒரு புது விடியல்!

சென்னை குப்பை மேட்டில் பிளாஸ்டிக் பொறுக்கியவர் எப்படி மும்பை கோடீஸ்வரரானார்? கும்பாபிசேக மேடையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!
தமிழ் கதை | couple in Temple Consecration
தமிழ் கதை | couple in Temple ConsecrationAI Image
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

பெருநகரின் அந்தப் புறநகர் பகுதி விழாக்கோலம் பூண்டு கிடந்தது.

மலையடிவாரத்திலுள்ள அந்த முருகக் கடவுள் கோயிலின் கும்பாபிஷேகத்தை மும்பையைச் சேர்ந்த அந்தத் தம்பதியினர் நடத்தி வைக்க வருகிறார்கள் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்து விட்டது.

‘மும்பைக்காரர் எதற்கு இங்கு வந்து எல்லாம் செய்கிறார்? அவர் யாராக இருப்பார்?’ என்று ஒரு சாரார் சந்தேகப்பட்டார்கள்.

’அவர் இங்கிருந்து மும்பை சென்று அங்கு தன் சாம்ராஜ்யத்தை நிறுவியிருப்பாரோ!’ என்று இன்னொரு சாரார் கருத்து கொண்டிருந்தார்கள்.

எது எப்படியோ… இந்த ஆண்டு திருவிழா பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் அந்தப் பகுதியையே ஒளி வெள்ளத்தில் மூழ்கடித்து இருந்தது.

காலையில்தான் கும்பாபிஷேகம். மாலை பிளைட்டிலேயே அவர்கள் குடும்பத்துடன் வந்து விட்டார்கள். ஆணொன்றும் பெண் ஒன்றுமாய் இரண்டு குழந்தைகள். நால்வருமாய் வந்து நட்சத்திர ஓட்டலில் தங்கி விட்டார்கள். ரெப்ரஷ் ஆகி, குழந்தைகளை அறையில் விட்டு விட்டு அவர்கள் இரண்டு பேர் மட்டும் கோயிலுக்கு வந்தார்கள்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com