

புத்தாண்டை முன்னிட்டு அன்று அந்தத் தெருவே களைகட்டி கூட்டமாக இருந்தது.
இந்த பரபரப்பிலும் சிறுவன் ஒருவன் மட்டும் ஏக்கமாக பெரியகடை ஒன்றை பார்த்துக்கொண்டு இருந்தான். அது ஒரு பெரிய ஷூக்கடை.
மற்றவர்களுக்கு பாலிஷ் போட்டு சுயமாக சம்பாதித்து வந்த சிறுவனுக்கு தனக்கு ஷூ வாங்க வேண்டும் என்று வெகு நாளாக ஆசை.
உடனே தீர்மானித்து பக்கத்திலிருந்த சின்ன கடைகளில் ஒவ்வொரு கடையாக ஏறி ஏறி இறங்கினான்.
தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து ஷூவில் இருக்கும் லேஸ் கூட வாங்க முடியாது என்பதை உணர்ந்து அவன் அந்த கடைகளையே ஏக்கமாக பார்த்தான்.
அப்போது அவன் தோளில் யாரோ கை போட, திடுக்கிட்டு திரும்பி பார்த்தான். ஒரு பெண், "அவனிடம் இங்க என்ன பார்க்கிறே?" எனக் கேட்டாள்.
"அடுத்த மாசமாவது நிறைய காசு சம்பாதிச்சு ஷூ வாங்கணும்னு கடவுளிடம் வேண்டிகிட்டு இருந்தேன்" என்றான் சிறுவன்!
அவன் சொன்ன அந்த வார்த்தைகளில் உண்மை இருப்பதை உணர்ந்த பெண், நேரே தன் கடைக்குள் சென்று அந்த சிறுவனின் காலுக்கு ஏற்றவாறு அழகிய 'ஷூக்கள்' ஒரு ஜோடியை தந்தாள்.
உடனே, அந்த சிறுவனுக்கு ஒரே குஷி ஆகிவிட்டது. "இதற்கு பணம் இல்லியே?" என சிறுவன் சொல்ல...
அப்பெண், "வேண்டாம். நான் உனக்கு சும்மாதான் தருகிறேன்!" என்று கூற, அவன் கண்ணில் கண்ட சந்தோஷத்தை பார்த்த அப்பெண், சிறுவனிடம், "நான் யாருன்னு தெரியுமா? என்று கேட்டாள்.
தான் தான் அந்தக் கடைக்கு முதலாளி என்று கண்டு பிடித்து விடுவான் என்று எதிர்பார்த்தாள். சற்றும் சளைக்காமல் அடுத்த நொடியே, சிறுவனிடமிருந்து வந்தது பதில்.
"நீங்கதான் கடவுள்!" இந்த பதிலால் அப்பெண் மெய் சிலிர்த்தாள்.