

நாடெங்கும் பரவி இருந்த கொரோனா காலகட்டத்தில் அவனுடைய ஊரிலும் கொரோனா பரவி இருந்தது. வேலையில்லாமல் எல்லோரும் வீட்டில் முடங்கிக் கிடந்த கால கட்டம் அது.
அவனுக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. வறட்டு இருமல், இடைவிடாத காய்ச்சல், வாந்தி, உடம்பு வலி இவ்வாறு இருந்தது.
மெடிக்கலில் மாத்திரை மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்தான். எந்த ஒரு பலனும் அளிக்கவில்லை. அவனுடைய தாய்மாமா வண்டியில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் ஊசிப் போட்டு வீட்டுக்கு அழைத்து வந்தார்.
காய்ச்சல் கொஞ்சம் குறைந்து இருந்தது. வீட்டில் எப்பொழுதும் படுத்த படியே கிடந்தான். அம்மாவும் நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு போன்றவற்றை போட்டுக் கொடுத்தார். அதைக் குடித்தான்.