
ராகவ் வழக்கம் போல ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியின் லாபியில் இன்டர்வியூ அட்டெண்ட் செய்வதற்காகக் காத்திருந்தான். அடுத்ததாக அவனை அழைக்கப் போவதாகச் சொல்லியிருந்தார்கள். அவனுக்கு இப்போதெல்லாம் டென்ஷன் என்பதே இல்லை. ஏனென்றால் இது அவனுக்கு முதல் இன்டர்வியூ இல்லையே.
மணி அடித்ததும் “மிஸ்டர் ராகவ். இட் ஈஸ் யுவர் டர்ன்” என்று ஒரு பெண் சொல்ல ராகவ் கேஷுவலாக எழுந்து தன் ஃபைலுடன் உள்ளே நுழைந்தான்.
உட்காரச் சொல்லி அரைமணி நேரம் கேள்விகளைக் கேட்டார்கள்.
இன்டர்வியூ இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. சேர்மன் ஒரு கேள்வியைக் கேட்டார்.
“ஸீ மிஸ்டர் ராகவ். இந்த வேலைக்கு நீங்க செலெக்ட் ஆகிட்டீங்கன்னு வெச்சுக்குவோம். ஏற்கெனவே நீங்க ஒரு கம்பெனியிலே இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணியிருக்கீங்க. இங்க உங்களுக்குத் தர்ற ஆஃபரை விட பத்தாயிரம் ரூபாய் அவங்க அதிகமா தர்றாங்கன்னு வெச்சுக்குவோம். நீங்க எந்த ஆஃபரை அக்செப்ட் பண்ணுவீங்க?”
ராகவ்வின் மூளை பரபரவென வேலை செய்தது.