
அலுவலகத்தில் இன்று மதியம் உணவு இடைவேளையில் நடந்த ஒரு விஷயம். கொஞ்சம் வருத்தமான மற்றும் நெகிழ்ச்சியான ஒன்றாக இருந்தது. தணிக்கை வாய் பட்டு போன மனோநிலையை இளக்கி ஒரு ரமண கேள்விக்கு வடிவேலு நகைசுவையாய் அமைந்தது பதில்.
(பீடிகை புகை அதிகமாயிருக்கு அணைச்சுடப்பா - உட்குரல்)
பெரிதாக ஒன்றுமில்லை. வழக்கமாக என் மதிய உணவின் கடைசி பகுதியை ஒரு அணிலுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். நேரம் காலம் (விடுமுறை நாட்கள் நீங்கலாக) எல்லாம் அத்துப்படியான ஒரு அணிலார் காலம் தவறாமல் அவர் பங்குக்கு ஜன்னல் திட்டில் வந்து நிற்பார்.
அன்றொரு நாள் உணவின் சுவையாலும் கொஞ்சம் பசியாலும் தேவையற்ற சிந்தனையாலும் அணிலை மறந்து உணவு முழுவதையும் கபளீகரம் செய்து விட்டேன். புரிந்ததும் சட்டென குற்ற உணர்வு இறுக்கமாய் அமர்ந்தது இதயத்தில். ஏன் என்று தெரியவில்லை.
("அவ்வளவு நல்லவனா நீ?" - உட்குரல்)
டிபன் பாக்சின் காலியிடம் மனதில் கனத்தது. 'அணில் ஏமாந்து போக போகிறது!'