
“இதே தெரு தான். கோல்டு அபார்ட்மென்ட்ஸ். இரண்டாவது தளம் ஃப்ளாட் ஏ-8” டிரைவரிடம் சொல்லி டாக்ஸியை நிறுத்தினான் குணா.
“ஸார் பெரிய குடியிருப்பு போல. மொத்தம் எத்தனை தளம்?” வாய் பிளந்து கேட்டான் டிரைவர்.
“மொத்தம் 16 தளம்” என்று சொன்னபடி இறங்கினான் குணா.
செல்ஃபோன் சிணுங்க எடுத்து “என்னப்பா? வேற வேலை இல்லையா? இன்னைக்கு நாலாவது கால். எனன வேணும் உனக்கு?” சற்று சலிப்பான குரல்.
“டேய் தேதி பத்தாச்சு. உன்னிடமிருந்து பணம் வரலை”
“ஸாரிப்பா வேலை பிஸியில் மறந்தே போச்சு. நாளைக்கு போடவா?”
“டேய் இப்ப டாக்டரிடம். போகனும்” இருமினார்.
“சரி ஜி-பேயில் போட்டு தொலைக்கிறேன்”
“என்ன உடம்புனு கேட்க மாட்டியா?” நொந்த குரலில் கேட்டார்.
“அப்பா ரோடில நிக்கறேன். அப்பறம் பேசவா?”
“நீ எங்கே பேசப்போறே! பணத்தையாவது மறக்கா்மல் போடு” என்று ஃபோனை வைத்தார்.