
ரவிவர்மனுக்கு வாய்த்த மனைவி அறிவு. பேர் மட்டுமில்லே அறிவிலும் அவள் அறிவுதான்.
ரவிவர்மன் ஒரு கைநாட்டு பேர்வழி... அப்பாவியும் கூட.
கணவனுக்கு வெளி உலகம் தெரியவேண்டுமென்பதற்காக இரயில் பயணம் மேற்கொண்டாள் அறிவு.
இரயில் சென்டிரலில் இருந்து புறப்பட்டது. அது உஸ் உஸ் உஸ் முச்சிரைத்தது போல புறப்பட்டது. 'அதென்ன புள்ளத்தாச்சி மூச்சு விடுறா மாதிரி ஒரு சவுண்ட்?' ஆரம்பித்தான் அப்பாவியாக.
நெல்லூர் ஸ்டேஷனில்… டீ, காபி., டீ, காபி என்ற சத்தம்.
உடனே, "என்ன அறிவு… நம்ம தீபாக்கா இங்க இருக்காங்களா? யாரோ கூப்பிடுற சத்தம் கேட்குதே!"
"ஐயோ அது தீபாக்கா இல்ல டீ, காபி விற்குறாங்க."
விஜயவாடா தாண்டி ஒரு ஸ்டேஷன்… "கரம் சமுசோய்.. கரம் சமுசோய்…" என்ற குரல்.