(சிரி) சிறுகதை: ஐயனுக்கே ஆதார்!
“சிவபெருமான் ஆழ்ந்த தியானத்திலிருக்கிறார்!”
தம்பூரா இசையோடு, “நாராயணா, நாராயணா...” நாரதரின் குரல் ஒலிக்கிறது.
சிவபெருமான் தியானத்திலிருந்து எழவில்லை.
விடாமல் தம்பூராவை மீட்டிக் கொண்டிருக்கிறார் நாரதர். கடைசியில் கண் விழிக்கிறார் சிவபெருமான்.
“என்ன நாரதரே, சேதி எதுவும் உண்டோ?“
“ஐயனே! நீங்கள் இந்த இடத்தில் தொடர்ந்து தியானத்தில் இருக்க வேண்டுமென்றால், இருப்பிட சான்று வேண்டுமாம். இது அரசாங்கத்தின் கட்டளை."
"அரசாங்கமா? யாம்தானே அரசாங்கம்? என்னுடைய ராஜ்யம்தானே நடந்து கொண்டிருக்கிறது?"
“ஐயனே, நீங்கள் தியானத்தில் மூழ்கி விட்டால்…. விழிப்பதற்கு பல யுகங்கள் ஆகிறது... இப்போது கலியுகத்தில் விழித்திருக்கிறீர்கள். ஆதலால் ராஜ்யம் இப்போது 'மக்களாட்சி' தத்துவமாக மாறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் ஆட்சி நடத்தப்படுகிறது. இது தங்களின் 'ஞான திருஷ்டி'க்கு புலப்படவில்லையா?"
“நாரதா!" சிவனின் கோபக்குரலில் நாரதர் பயந்து நடுங்கினார். "இருக்கட்டும்…இருக்கட்டும் என்னையே சோதிக்கிறாயா நீ?" என்றார்.

