
Wait. கிரேசி இஸ் Crazy. கிரேசி Gracy is a woman.
கிரேசி (Gracy) ஒரு ஆங்கில பேராசிரியர். உதகை அரசினர் கலைக் கல்லூரியில் பேராசிரியர். இதுதான் அவருக்கு முதல் அப்பாயிண்ட்மென்ட். கலைக் கல்லூரியில் முதல் இரண்டு வருடங்கள் மட்டுமே மொழி வகுப்பு இருக்கும். செமஸ்டர் சிஸ்டம். மொத்தம் 4 தாள்கள்தான்.
ஷாகுல். இவர் முதலாம் ஆண்டு பி.ஏ. பொருளாதாரம்.
முதல் செமஸ்டரிலேயே ஆங்கில வகுப்பிற்கு மேடம் கிரேசிதான் வந்தார். ஷாகுல் வகுப்பு நடக்கும்போது திடீரென நக்கல் நையாண்டியை ஆரம்பித்து விடுவார். கிரேசி ஷாகுலை நன்கு கவனித்தார். வகுப்பில் ஆர்வம் இல்லை. ஆனால், ஷாகுலுக்கு கிரேசியை ரொம்பப் பிடித்து இருந்தது.
வாரம் ஒரு க்ளாஸ் கட்டுரை எழுதுவது. ஷாகுல் தனக்கு தோன்றியதை தைரியமாக எழுதுவார். இந்த வாரம்… கூண்டில் உள்ள கிளி மற்றும் சுதந்திரமாக உள்ள காக்கா கற்பனை செய்து பேசிக்கொள்வதை எழுதுங்கள் என்றார். ஷாகுல் கையில் நோட்டு கிடைத்ததும் ஒரு முறை யோசித்தார். அவருக்கு நல்ல ஐடியா கிடைத்தது.
அவர் எழுதிய சுருக்கம்.