
மோகன் ஒய்வு பெற்ற வங்கி ஆபிசர். அவர் வேலையில் இருக்கும் போதே அவர் மனைவி மறைந்து விட்டார். அதற்கு பிறகு மன சோர்வு ஒட்டிக் கொண்டது.
அவர் மகன் ஒரு ஐடி கம்பெனியில் ஊழியர். நல்ல சம்பளம்.
மோகன் அடிக்கடி சென்னையில் உள்ள கோவில்களுக்கு செல்லும் வழக்கம் உடையவர். இந்த வாரம் சோழிங்கநல்லூர் நரசிம்ம கோவிலுக்கு சென்றார். திரும்பும் போது ஒரு குட்டி குரங்கு அவரை தொடர்ந்தது. மோகன் பசியோ என்னவோ என்று அடிவாரத்தில் உள்ள பழக்கடையில் அரை டஜன் பழம் வாங்கி கொடுத்தார்.
குட்டி தின்றது. மோகன் பாபு... 'சரி போகலாம்' என்று நினைத்து கிளம்பினார். குட்டி குரங்கு சாப்பிடுவதை நிறுத்தி மோகனை பின் தொடர்ந்து வந்தது. மோகனுக்கு ஒன்றும் புரிய வில்லை. குட்டி விடுவதாக தெரியவில்லை.
அனுமன் பக்தன் மோகன் ஒரு முடிவு எடுத்தார். அருகில் உள்ள கடையில் பெரிய ஓலை பையை வாங்கினார். பின் குட்டியை தனது ஓலை பையில் போட்டு எடுத்துக் கொண்டார்.
பஸ்சில் யாரவது பார்த்து விடுவார்களோ என்று பயந்தார்.
யாரும் கவனிக்க வில்லை.