
“இதுவரை ஊரில் கெளரவமா வாழ்ந்தாச்சு. கடைசி காலத்திலே இப்படியா பேரெடுக்கணும்?”
“நல்ல பேரு எதற்கு பிரயோசனம்? நீங்க வீடு, வயல், தோப்புனு வாங்கி குவிச்சுட்டீங்களான? ஒன்னுமில்லை. மாசாமாசம் 20 தேதிக்கு மேல் வளையல், தாலி மோதிரம் எல்லாம் மார்வாடி கடைக்குப்போகும். கொஞ்சம் வித்யாசமா பசங்க சம்பாதிக்க பார்த்தால் உடனே தடை போடறது, திட்டறது சண்டை போடறது. சண்டையை குருஷேத்ர யுத்தம் மாதிரி நாள் கணக்கா போடறது.” அம்மா புலம்ப,
“ஆமான்டி உழைச்சால் தான் அன்னிக்கு சாப்பாடு என்ற நிலையில் கூட நான் நாலு பசங்களுக்கு டியூஷன் எடுத்து அதில் வர காசில் அரைவயிறு சாப்பிட்டோம். ஊரிலே கெளரவம் மட்டும் மிஞ்சியிருந்தது. இப்ப அதுவும் போகப்போகுது.” ரகு அடிக்குரலில் பேசினார்.
“இப்ப என்ன? சேது எடுத்த காண்டிராக்டை யாருக்காவது வித்துடனும். இல்லைனா காண்ட்ராக்டை கை கழுவனும் அதானே...”