
பதினைந்து பேர்களின் கனவும் வாழ்க்கை சேமிப்பும், மொட்டை கோபுரமாய் குடிபோக முடியாத கட்டிடமாய் நின்றதை பயன்மிகுந்த சொத்தாக மாற்றிய வீரசரித்திரம் இது.
அந்த கடற்கரை நகரத்தில் குடியமர்வது என்று முடிவெடுத்த பிறகு, பாரதிக்குத் தோன்றியது போல, சொந்தமாகக் காணி நிலம் வேண்டும் என்று சங்கருக்கும் ஆசை வந்தது. பல்வேறு பகுதிகளில்; எப்படி சுற்றினாலும் ஐந்து கிலோமீட்டரே பரப்பளவு கொண்ட அந்த ஊரில் நகரின் மத்தியில் ஒரு இடம் அவனைக் கவர்ந்தது. துடிப்பான இளைஞனின் பேச்சுத் திறமையும் அந்த இடத்திற்கு அன்றைய மார்க்கெட் விலையை விடச் சகாயமான விலையும் அமையப்பெற்றது அதன் கூடுதல் சிறப்பு.