

"பழைய இரும்பு வாங்கறது... பழைய பேப்பர் வாங்கறது….. வீனாப்போன டி.வி மற்றும் மின் விசிறி மோட்டார் வாங்கறது... அத்தனைக்கும் உடனே நல்ல பணம் கிடைக்குமுங்க.." என்றபடி சைக்கிளில் சென்றவன் தெரு தெருவாக கூவிக்கொண்டே சென்றான்.
யாரோ அழைப்பது தெரிந்தது. ஒரு காவல்காரர்தான் அழைத்தார். அவனுக்கு தெரியும், அது ஒரு காவல் உயர் அதிகாரி வசிக்கும் பங்களா என்று. உடனே மகிழ்ச்சியுடன் அங்கு சென்றான்.
"உள்ள அம்மா நிக்கறாங்க. அங்க போயி கேளு" என்று அனுப்பி வைத்தார் காவல்காரர்.
அவன் தயங்கி தயங்கி சென்றான்.
"இங்க வாப்பா" குரல் கம்பீரமாக இருந்தது.
அவன் சைக்கிளுடன் வேகமாக ஓடிசென்று அந்த அம்மாவின் முன் கை கட்டி நின்றான்.
"இந்தா இதெல்லாம் எடுத்துக்கோ. நீ எப்படி நியாயமானவனா? சரி.. சரி.. என்னனு பாரு" என்று அவனை வைத்த விழி விலகாமல் பார்த்தபடி இருந்தார் உயர் காவல் அதிகாரியின் மனைவி.