சிறுகதை: நம்பிக்கை ஒளிக்கீற்று!

சொந்த வீடு கனவை நனவாக்க ஒரு குடும்பம் படும் கஷ்டங்களை உணர்ச்சிபூர்வமாக சொல்லப்பட்டுள்ள கதையை படிக்கலாம் வாங்க...
Tamil Short Story kanavu illam
ஹக்கீம், கதிஜாAI generated
பாலமுருகன்.லோ

பிறந்த இடம் கரூர் மாவட்டம். பள்ளிப் படிப்பு அனைத்தும் கரூரில் முடித்த பிறகு. வேலை நிமித்தமாகச் சென்னைக்கு 1997-ல் வந்தவன் பல நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது ஒரு ஜெர்மானிய நிறுவனத்துக்கு ஆஃப்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் பிரிவில் வேலை செய்துவருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு எழுதும் ஆர்வம் இருந்தது. ஆனால் வளர வளர படிப்பு, வேலை திருமணம், பிள்ளைகள் என்று வந்த பிறகு எழுதும் ஆர்வம் சற்று மங்கிக் காணப்பட்டது. ஆனால் என்னாலும் மீண்டும் எழுத முடியும் என்று என்னை நான் முழுமையாகக் கண்டுகொண்ட வருடம் 2020 என்று கூறலாம். 2019-ல் இருந்து தீவிரமாகக் கதை மற்றும் கவிதைகளை வாசித்து ஒரு வாசகராக என்னை முழுமையாக மாற்றி இருக்கிறது இந்தக் கலை இலக்கிய உலகம்.

Updated on
Kalki Strip
Kalki Strip

“ஏங்க கதவ திறங்க, திறங்க" என்று உள்புறமாகப் பூட்டியிருந்த படுக்கையறையின் கதவை, உள்ளங்கைகள் சிவந்து போக, விரல் முட்டிகள் வலிக்கத் தட்டினாள் கதிஜா.

உள்புறமாகப் பூட்டியிருந்த படுக்கையறையின் கதவு திறக்கப்படவில்லை. உச்சக்கட்டப் பதற்றத்தில் கதிஜா குரலுடைத்துக் கத்தினாள்! அவளது அலறல், காயம்பட்ட பறவையின் கதறலாய் ஒலித்தது.

“ஏங்க இப்படிச் செய்றீங்க? எல்லாத்தையும் பேசிக்கலாம். நீங்க செய்யறது பாவம், நாங்க என்ன குற்றம் செஞ்சோம்! எப்படி மனசு வந்தது உங்களுக்கு? கொஞ்சம் நம்ம பசங்களை நினைச்சுப் பாருங்க. இந்த முடிவு தவறுன்னு புரியும். இப்ப கதவ திறக்கப் போறீங்களா இல்ல, நான் அக்கம் பக்கத்தில் உள்ள அனைவரையும் கூப்பிடட்டுமா?”

ஐந்து நிமிடங்கள் யுகங்களாய் நகர, படுக்கையறையின் கதவு திறக்கப்பட்டது. சோர்ந்து, களைத்து, உயிரை யாரோ உறிஞ்சி எறிந்தது போன்றதொரு முகத்துடன், சாவின் பயத்துடன் ஹக்கீம் அறையிலிருந்து வெளியே வர, மனைவி கதிஜா ஓடிப்போய் கட்டிக்கொண்டு அழத் தொடங்கினாள்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com