
“ஆனி அலறும்,” சொலவடைக்கேற்ப, தென்மேற்கு பருவக்காற்று அலறி அடித்து வீசத் தொடங்கியது.
”கண் போன போக்கிலே, கால் போகலாமா?..” அலைபேசி காற்றில் தத்துவமாய் அழைக்க, “எ, என்னங்க, உங்க அலைபேசி அடிக்குதே..” பதட்டமாய் மனைவி கமலா.
வாசலில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தி, வேக, வேகமாய் ஹாலை அடைந்து, அலைபேசியின் தொடுதிரையைப் பார்க்க.. மகன் தினேஷின் நம்பர் பளிச்சிட்டது.
“குட் மார்னிங் தினேஷ், மணி ஏழு தான் ஆகுது. அதுக்குள்ளேவா எந்திரிச்சிட்டப்பா?..”
“அப்பா.. மணி ஏழரை. ஸாரிப்பா. நமக்கு ‘பேட்’ மார்னிங்ப்பா...” சொல்லி மறுமுனையில் அவன் நிறுத்த, வினாடி நேர மௌனம் விதுவிதுப்பாய் நகர்ந்தது மூர்த்திக்கு.
“எ.. என்னடா புரியலை?..”