
ராஜா சங்குணிக்கு ஓர் அடங்காத ஆசை.
எப்படியாவது ராஜசபையில் பாடிடனும்.
“உங்க கரகரத்த குரலில் பேசறதே ஓர் இமாலய வெற்றி. போனவாரம் நீங்க 'பாடலாமா' என்று ஒரு வரி பாடியதை கேட்டதற்கே அரசவையின் மாடுகள் வெறிகொண்டு காவலர் இருவரை முட்டித்தள்ளி தங்களை நோக்கி பாய்ந்து வந்தன. அதோட மல்லுக்கட்டுவதற்குள் போதும் போதுமென ஆச்சு. உங்களுக்கேனிந்த விபரீத ஆசை?” இசைப்புலவர் சாணி கேட்டார்.
“எனக்கு இசை மீது அளவிடமுடியாத காதல்..“
“அப்படின்னா பாடாதீங்க” என்ற முழு காமெடியை கேட்டு சபையே சிரித்தது.
கண்ணீர் மல்க, “மன்னனை அவமதிக்கறீங்களா?” என்று ராஜா சங்குணி கேட்க,
“ஐயோ மன்னா நாங்கள் அப்படி நினைப்போமா? தெரிஞ்ச விஷயம்தானே. உங்களை கேலி செய்வது எங்கள் நோக்கமில்லை. உங்களை அவமானப்படுத்தற விஷயங்களில் உஷார் பண்ணுவது எங்க கடமை. நீங்க என்ன டிவியில் பாடி 50லட்ச ரூபாய் பெறுமான வீட்டை ஜெயிக்கபோறீங்களா?”
“ஏன்? முடியாதா? எனக்கு என் திறமை மேல் நம்பிக்கை இருக்கு” உறுதியாய் சொன்னார்.
“அது போதாது. அவங்களுக்கு உங்க திறமை மேல் நம்பிக்கை வரனும். அப்பத்தான் உள்ளேயே விடுவாங்க. நிறைய சுற்றுக்கள் வரும். அதில் எலிமினேட் ஆகாமல் கடைசி சுற்று வரை வரணும். அதில் ஜெயித்தால்தான் வீடு. இதெல்லாம் நடக்கிற காரியமா?"
“முடியாததை முடித்து காட்டுவேன்!”
“தலைமுடியையா மன்னா?”