
அருண் அந்த கிணற்றையே பார்த்துக் கொண்டிருந்தான்... சிந்தனை எங்கோ சென்றது. தங்கையின் நினைவு வேறு வாட்டியது. அங்கிருந்து அவன் மனம் நகர்ந்து சென்று கொண்டிருந்தது. சிறு வயதில் அவனும் அவன் தங்கை அபியும் அந்த கிராமத்தில்தான் வசித்தார்கள். அந்த ஒருநாள் வந்ததில் அவர்களது மொத்த வாழ்க்கையும் மாறிப் போனது.
"டேய், அருண் இங்க வா, அங்க போகக் கூடாதுனு எத்தன தடவ சொல்றது..." என்று கத்தினாள் அம்மா. "இதோ வரேன்", என்றபடி எழுந்து சென்றான். அவனது மாமா வந்திருந்தார்.
"என்னமா சீதா, இங்க வரவே கூடாதுனு இருக்கீங்களா?" என்றபடி அமர்ந்தார். "அப்படி இல்ல அண்ணா..."
"என்ன அருண் எப்படி இருக்க?"
"நல்லா இருக்கேன் மாமா."