

விடியலின் மெல்லிய வெளிச்சம் தெருவில் பரவத் தொடங்கியிருந்தது. இரவின் அமைதி இன்னும் கலையாத அந்த வேளையில், மாணிக்கம் தனது மளிகை கடையைத் திறந்துக்கொண்டிருந்தான். அவ்வழியில் வந்த மாடசாமி,
"என்ன மாணிக்கம் கடையைத் திறக்கிற போல?" என்றார்.
"ஆமாம் அண்ணே, எத்தனை நாள் கடையைப் பூட்டி வைப்பது."
"ஏம்பா! மாணிக்கம் ஒரு வாரமா கடையை மூடிட்டு அப்படி என்ன முக்கியமான வேலை?"
"அதுவானே, கோபால் இல்ல! அவனுக்கு உடம்பு சரியில்லையென்று தகவல் வந்தது. அவனது சம்சாரம் சொல்லி அனுப்பியிருந்தா, அதான் போய்ப் பாத்துட்டு வந்து விடலாம் என்று ஊருக்குப் போயிருந்தேன்."
"ஏன் என்ன ஆச்சு அவனுக்கு? உன் தம்பிதானே!"
"ஆமாம்னே, படுத்த படுக்கையா ஆஸ்பத்திரியில சேர்த்திருந்தாங்க."
"ஏ? என்ன அவே உடம்புக்கு?"