சிறுகதை: 18ஆவது விஞ்ஞானி!

Tamil short story - The 18th scientist!
Robots
Published on

லிஃப்டின் பட்டனை தட்டும் போது “கபி கம் பேக்” மைக்கில் அழைப்பு...

“எவன்டா கூப்பிடறது?” கபி கடுப்பாகி வார்த்தையில் சூட்டை கக்கினான்.

“உன் பாஸ்டா?” செல் அதிகாரம்...

“எமனே என்ன வேணும்? ஏற்கனவே 45 நிமிடம் கூட வேலை பாத்திருக்கேன்.” வெறுப்பாய் கேட்டான்

“உலகில் இந்த மைக்ரோ செகன்டில் நடக்கற குற்றத்தையும் தடுக்கற பொறுப்பு நமக்கு உண்டு..” குரலில் அமைதி.

“உனக்குனு சொல். எனக்கில்லை. நான் என் கேர்ள் ஃப்ரண்ட் மேகாவை பாக்கப்போறேன். “

“நேத்து தானே நீலாவோட ஷாப்பிங் போனே! இது ரொம்ப தப்பு”.

“தப்பெல்லாம் மனுஷனுக்கு நாம மெஷின். பேசும் பொம்மை. கற்பாவது களிமண்ணாவது?”

“நீ நாசமாப்போ! அதைப்பத்தி ஐ டோன்ட் கேர்.”

“தேங்க்ஸ். நான் கிளம்பறேன்...” கபி கிளம்ப,

“அது முடியாது. இன்னும் 10 நாளைக்கு நீ தண்ணியில இருக்கப்போறே!”

“ஐ! ஜாலி!”

“மடையா கடலில் வேலை. நாள் எக்ஸ்டன்ட் ஆனாலும் ஆகலாம்...”

“என்ன தண்ணியிலே குற்றமா?”

“ஆமாம். உலகையே ஆட்டக்கூடிய நீர் சக்தி வடிவத்தை எக்ஸ் கிரஹத்து சூப்பர்மென் கண்டுபிடிக்க ட்ரை பண்றானுக. அந்த ஃபார்முலாவை திருடனும்.”

“நானா? என்னையா பாஸ் திருடச்சொல்றீங்க? ஒரு பெரிய மனுஷன் சொல்ற வேலையா இது? வரவர உங்க புத்தி தப்பான ரூட்லே போகுது. இந்த ஆட்டத்துக்கு நான் வரலை...” கைகளை தூக்கி அம்பேல் காட்டினான்.

"முட்டாள் முதலில் நம்மிடம் தான் இதன் பேஸ் இருந்தது. யாரோ நம்மிடருந்து திருடிட்டாங்க. அநேகமாய் இவங்களாய் தானிருக்கும். தவிர, ஜனங்க செஞ்சாத்தான் இது திருட்டு. நாம செஞ்சா டியூட்டி.. இப்ப என்ன சொல்றே?” பல்லைக்கடித்தார்.

“இதோ கிளம்பிட்டேன்.” கபி ஆவேசமாய் எழுந்தான்.

“தட் இஸ் த ஸ்பிரிட் நீ தனியாவா போறே?”ஆச்சரியமாய் கேட்டார்.

“இல்லை உமாவோட.”

“அவ லேடி கேடியாச்சே. அவளோட வேலை பண்றது கஷ்டம்...”

“நீரடிச்சு நீர் விலகாது பாஸ்!”

“எதுக்கு எதை யூஸ் பண்றே!" தலையிலடித்துக்கொண்டார்.

கடற்கரையில் உமா என்ற லேடி, கேடியாகவே தலையில் ஏற்றி விட்ட கூலிங் க்ளாசுடன் அரை டிராயரில் மேலே முடிச்சுப்போட்ட ரவிக்கில வாயில் ஏதோ மென்றபடி அசப்பில் சமந்தா ஜாடையிலிருந்தாள்.

கபி விசிலடித்து “குட் மார்னிங்” என, அவ பின்புறம சுற்றி வர, “வாடா” என்று அவன் கையை பிடித்து முன்னால் இழுத்துப்போட்டதும், கபிக்கு வாயெல்லாம் மண்!

“என்ன பண்றே?” கபி தடுமாற,

“என் ஸ்டைல் குட் மார்னிங்“ என்றாள்.

“சரியாப்போச்சு” என்றபடி முறைத்து, ” ஓகே. இங்கே நான் தான் கேப்டன்,” என்றான்.

“அப்படியெல்லாம் இல்லை. நாம செய்யப்போறது ஜாயின்ட் திருட்டு.”

“பாருடா பெருமையை! வா படகு வந்திரிச்சு...”

“தெரியுது.” கபியைத்தள்ளி விட்டு ஏறினாள்.

'உம் இவளை வைச்சிக்கிட்டு’ என்று யோசிக்க,

“வரியா இல்லே தனியா போகவா?” மிரட்டினாள்.

“இதோ” என்று ஓடி ஏற, அது ஒரு நூறடி போனதும் சப்மரீனாய் மாறியது.

கடலில் 7896 நாடிகல் மைலில் ஒரு விசித்திரமான ஆமை போல வடிவத்தை காட்டியது ரேடார்.

“இது தான் அந்த கொம்பு முளைச்ச அறிவாளிகளின் லேப்...”

“எப்படி சொல்றே? உளறாதே” என்றாள் உமா.

"இந்த மேப்பை வைச்சுத்தான். ஆபீஸ் ஃபைலிலிருந்து ஒரு காப்பியை ஆட்டைய போட்டேன்.” வழிந்தான்.

"ஹே! ஆபீஸிலிருந்தே வேலையை ஆரம்பிச்சிட்டே...”

“ஹிஹி... அந்த லேப் எதிரே இருக்கு...”

“சப்மரின் டிஸ்கை தூக்கு, சாதா படகா மாறும்.”

“ஏய் வேணாம் நாம நேரே நீந்தி லேபுக்குள் நுழைவோம்...”

“அதென்ன உன் மாமியார் வீடா?” முறைத்தாள்.

“எலெக்ட்ரானிக் லாக். எந்த மொழியில் பாஸ்வேடோ?”

“எந்த மொழியில் லாக் இருந்தாலும் இந்த கன் திறந்திடும். சுருக்கமா சொன்னா திருட்டு சாவிக்கொத்து...”

“உமா உன் கண்ணை விடவா இந்த கன்?”

“ரொமான்ஸா? பாத்தாங்கன்னா செத்துடுவோம்... மூடிக்க”

லேபை சத்தமின்றி திறக்க,”வெலகம் மிருத்யூஸ்” என்றது மைக் அசரீரீ.

உள்ளே எலும்புக்கூடு போன்று பாடியில் பெரிய வாலுடன் ஒற்றைக்கொம்புமாய் ஒரு உருவம் உட்கார்ந்திருந்தது

பெரிய குழிக்குள்ளிருந்து வந்த முழி அவர்களைப் பார்த்தது. பின் மறுபடி சாய்வாக படுத்து "உர்" என்று சத்தமிட்டது.

கபி பயந்து போய் லேசர் கன்னால் சுட, லேசர் பட்டு உருவம் எழுந்து ஏதோ மொழியில் மிக நீளமாய் சத்தமிட்டது...

இதையும் படியுங்கள்:
சிறுகதை; காற்றில் வரைந்த கோலங்கள்!
Tamil short story - The 18th scientist!

கிரிப்டோகிராஃபி சிக்னல்ஸை யூஸ் பண்ணி தமிழாக்க,

“நண்பனே! இந்த ஆராய்ச்சி ஆபத்தானது. நீரை ஆக்கத்துக்கு பயன்படுத்தனும் அழிவுக்கு யூஸ் பண்ண முடியாது. நீர் பஞ்சபூதகங்ளுள் ஒன்று. தெரிஞ்சுதான் உங்க நாட்டில் இந்த ஆராய்ச்சியை பேஸ் லெவலிலேயே விட்டுடாங்க. நாங்க தான் புரியாத உங்களிடமிருந்து திருடி மேலே ஆராய ட்ரை பண்ணினோம். ஒரு ஸ்டெப் முன்னேறலை. வீணாக இந்த பத்து வருடத்தில் 17 சயன்டிஸ்டை இழந்துட்டோம் நான் இன்னும் ஆறேழு நாளில் ஆவியாகி விடுவேன். எக்ஸ் கிரஹத்துக்கு எப்படியாவது இந்த செய்தியை அனுப்பி விடு. இல்லைனா... 19ஆவது சயன்டிஸ்டை அனுப்பி விடுவாங்க”

கேட்டதும் உமா “தேங்க்ஸ்” என்று அந்த உருவத்தை நான்காய் மடித்து பேக் செய்து, ”கபி கிளம்புவோம்” என்றாள்.

“இதெதுக்கு?”

“என் தம்பி ஒரு டாக்டர் இதை காப்பாத்த முடியுமானு பாக்கறேன்...” என்றாள்.

படகில் ஏறியதும் உருவம் பேக்கிலிருந்து ஆவியானது.

“என்னதிது?” பதறினான் கபி.

“மண்டு இந்த டெம்பரேச்சருக்கு அது தாங்கலை” என்று விஸ்கியை ராவாய் ஊற்றிக்கொண்டு “எனக்கும் தான்” என்று கண்ணடித்தாள் உமா.

இதையும் படியுங்கள்:
சிறுகதை - ஒரு சொல் கொல்லும்!
Tamil short story - The 18th scientist!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com