
மதன் தூங்கி எழுந்த போது மணி காலை 8.30
“2.30 மணி நேரம் லேட். எப்படி? இவ்வளவு தூங்க மாட்டேனே! லிபி எங்கேடா தொலைஞ்சே! என்னை எழுப்பாம என்ன செஞ்சுக்கிட்டிருக்கே?” கத்தினான்.
பதிலில்லை.
“லிபி லிபி லிபி” காட்டுக்கத்தலாய் கத்தினான்.
மறுபடியும் பதிலில்லை.
“ரோபோ லிபி! எந்திர ஜடமே! தண்டமான ஹோம் மேக்கர் ரோபோ லிபியை எனக்குனு கவர்மெனடில் அலாட் பண்ணியிருக்காங்களே!"
தலையிலடித்துக்கொண்டான். மதன் கத்திய கத்தலைக்கேட்டு ஓடி வந்தார் பக்கத்து ஃப்ளாட் குணா.
“என்ன ஸார்?” பதறியபடி கேட்டார்.
“என் வீட்டு ஹோம் மேக்கர் ரோபோ லிபியைக்காணோம்.”
“அப்படியா? ஆச்சரியமா இருக்கே! என் வீட்டு ஹோம் மேக்கர் ரோபோ மதியையும் காலையிலிருந்து காணலை. தேடிக்கிட்டிருக்கேன்.”
“எங்கே போனாங்க? அவங்க வரவர சரியில்லை... ரிபோர்ட் சேனலில் கம்ப்ளெய்ன்ட் பட்டனை ப்ரஸ் பண்ணிட வேண்டியதுதான்.”
“பாவம்ன்னு பாத்தா..” பேசிக்கொண்டிருக்கும் போதே லிபி உள்ளே வர,
“சண்டாளா வந்துட்டான் பாரு...” மதன் திட்ட,
“யார் சண்டாளன்? இவர் குணா“ என்றது லிபி.
மதனுக்கு சிரிப்பு வர, அடக்கிக்கொண்டான்.