
சிலருக்கு பெயர் பொருத்தமாக இருக்கும். சிலருக்கு பொருந்தாமல் போய் விடும். ஆம். அப்படி தான் 'வெள்ளை'சாமி பெயரும். அவன் வயது 13. அவன் நிறம் கருப்பு. அவனுக்கு மனதில் சந்தோசம் இல்லை. ஏனெனில் பள்ளியில் எல்லோரும் அவனை 'கருப்புசாமி' என்றே அழைத்தனர். ஏன்...? ஒரு டீச்சர் கூட அப்படி தான் கூப்பிடுவார்.
வெள்ளைசாமி நன்கு படிப்பான். அதி புத்திசாலியாக இருந்தான். தான் எப்படியாவது எதாவது ஒரு சாதனை செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டி இருந்தான். மாலை வேளைகளில் சிறுவர்களுடன் விளையாட போவதில்லை. காரணம் எல்லோரும் கருப்புசாமி என்றே அழைத்தனர். அவன் பக்கத்து வீட்டில் கல்லூரி படிக்கும் சுந்தரி என்று ஒரு இளம் பெண் இருந்தார். அவர் வெள்ளைசாமி-இடம் அன்பாக நடந்து கொள்வார்.