
ஆனந்தாயிக்கு ஒரு நல்ல பழக்கம் இருந்தது. தினமும் காலையில் தோசை சுடும்போது இரண்டு தோசைகளை கூடுதலாக சுட்டு, அதைச் சுருட்டி, சமையலறை ஜன்னல் கம்பிகளிடையே வைத்துவிடுவாள். பிச்சைக்காரர்கள் யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
அதை தினமும் ஒரு பிச்சைக்காரன் எடுத்துக்கொண்டிருந்தான். அவன் அந்த தோசைகளை எடுத்துக்கொண்டு, "விதைத்ததே விளையும்! நீ நன்மை செய்தால் அது உனக்குத் திரும்ப வரும்; தீமை செய்தால் அது உன்னைத் தொடர்ந்திருக்கும்!" என்று சொல்லிவிட்டுச் செல்வான்.
அவன் எதற்காக அப்படிச் சொல்கிறான் என்று அவளுக்குப் புரியவில்லை. தினமும் அவன் அவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தது உறுத்தலாகவும், எரிச்சலாகவும் இருந்தது. போகப் போக அது அவளைக் கடுமையாக கோபப்படுத்தவும் செய்தது.
அதனால் ஒரு நாள் அவள், தான் சுட்ட கூடுதல் தோசைகள் இரண்டிலும் விஷத்தைத் தடவி, வழக்கம் போல ஜன்னல் கம்பிகளிடையே சுருட்டி வைத்தாள்.