
'Dr.V.ராம் குமார், MBBS, Anesthesiologist' இந்த போர்டை எப்போதும் போல ஒரு கணம் அதிருப்தி பொங்கப் பார்த்து விட்டு காபினுக்குள் நுழைந்தான் Dr.VRK. லேப்டாப்ஐ தட்டியதும் டாக்டர்’ஸ் கான்பரன்சுக்கான அழைப்பு எட்டிப் பார்த்தது. டெல்லியில் 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் 3 நாள் கான்பரன்ஸ். சேர் பெர்சன், Dr.Y.ஸ்ரீநிவாசன்.
'நௌ, வெயிட் எ மினிட்...' அந்த Y S ஆ...? சில நிமிட கூகிள் சர்ச்சுக்குப் பின் அவனது ஊகம் ஊர்ஜிதமாயிற்று. கிளி மூக்கு Y S...! யஞ்யராமன் ஸ்ரீநிவாசன்! அவன் கிளாஸ் மேட், +2 ரான்க் ஹோல்டர். பின் அவன் அப்பாவின் டிரான்ஸ்ஃபர் காரணமாக மும்பை சென்றுவிட்டான்.
இப்பொழுது, Dr.Y.ஸ்ரீநிவாசன், MBBS, MS-MCh. (UCSF, கலிஃபோர்னியா) பல முறை மெடிக்கல் ஜர்னல்களில் பெயரைப் பார்த்திருக்கோம், ரிலேட் பண்ணவில்லை, ‘கிளி’ ன்னு. பணம், புகழ், முக்கியமாக வெளிநாட்டில் உல்லாச வாழ்க்கை, என்று VRK ஆசைப்பட்ட லைஃப் ஸ்டைலுக்கு சொந்தக்காரன்.