
அந்த நாட்டு அரசருக்கு தேவை ஒரு சிறந்த மந்திரி.
அரசிக்கு தன்னுடைய சகோதரனை அந்த பதவியில் அமர்த்த ஆசை.
அரசருக்கு துளியும் விருப்பம் இல்லை. அவருக்கு அரசியின் சகோதரனின் திறமை பற்றி நன்றாகவே தெரியும். அவனை அந்த பதவியில் அமர்த்தினால் என்னவாகும் என்றும் அரசர் அறிவார்.
அவரும் பொருத்தமான நபரை அந்த மந்திரி பதவியில் அமர்த்தி ஆட்சியில் நல்ல பரிபாரணம் செய்ய தன்னால் ஆன முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அன்று ஒருவர் வந்தார், அந்த ஊரை சுற்றிப் பார்த்து விட்டு வேறு நாடுகளுக்கு பயணத்தை மேற்கொள்ள.
எதிர்பாரத விதமாக அரசர் அவரை கோவிலில் பார்த்தார். பார்த்ததும் அரசருக்கு அவரை பிடித்துப் போய் விட்டது.
அவருடன் சிறிது உரையாடினார்.
அவரது தோற்றம், அறிவு, விவேகம் ஆகியவை அரசரை வெகுவாக கவர்ந்தது.
அவர் அந்த நாட்டின் மந்திரி பதவிக்கு பொருத்தமானவர் என்று முடிவுக்கு வந்த அரசர் அவரிடம் தனது எண்ணத்தையும், முடிவையும் தெரிவித்தார்.