
கல்கி களஞ்சியத்திலிருந்து...
தலைக்குப் பின் ஒளி வளர்த்திருப்பர்
திமிர் திணித்ததொரு மெளனம் அணிந்திருப்பர்
கையில் நிலா எந்தி உலா வருவர்
புழுக்களிடமும் புரட்சி பேசித் திரிவர்
'கவிதை கொடுத்தேனே படித்தாயா?"
கொலைமிரட்டல் விடுப்பர்
என்ன பாராட்டினாலும்
அப்படியா சொல்ற?
சத்தியப்பிரமாணம் கேட்பர்
"அந்த வரி எப்படி?
அராஜகத்தில் ஈடுபடுவர்
"உள்ளே ஒளிந்திருந்த சமூக பார்வை புரிந்ததா?"
சாக்ரட்சோடு ஒப்பிடச் சொல்வர்
இங்கே கொடு படித்துக் காட்டுகிறேன்'
நம் அடிப்படை நோக்கத்தை
அடியோடு அழுத்திடுவர்
இப்படியெல்லாம் சிலர் திரிகிறார்கள்.
என்னை எனக்கு ஞாபகப்படுத்திக்கொண்டு!
- கல்கி 07-09-2014 இதழில் கபிலன் வைரமுத்து எழுதிய கவிதை!