களை கட்டிய ‘பாரதி உலா’ நிறைவு விழா!

பாரதி உலா நிறைவு விழா...
பாரதி உலா நிறைவு விழா...
Updated on

ரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம்  நடத்திய  "பாரதி உலா 2023 " -வின் நிறைவு விழா கடந்த 24.02.24 அன்று சென்னை வாணி மகால் அரங்கில் மிகச் சிறப்பாக நடை பெற்றது.

பாரதியார் சிந்தனைகளை மையமாகக் கொண்டு, மாணவ மாணவிகளின் நடனம், பேச்சு, பாடல்கள் ஆகியவை சிறப்பாக அமைந்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றன.

தபம்ஸ் குழுவின் நிர்வாக இயக்குனர் முனைவர் பா.மேகநாதன், டெக்னோ முரளி  ஸ்ரீநிவாசன்,ஸ்ரீசாயி சங்கரா மேட்ரிமோனியல் குழுமத்தின் நிறுவனர் முனைவர். நா.பஞ்சாபகேசன், திரைப்பட இயக்குனர் திரு.ராசி அழகப்பன், கலைமாமணி திருமதி. பார்வதி பாலசுப்பிரமணியன், எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர், திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ் , திரைப்பட இயக்குநர் எஸ் பி .முத்துராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பாரதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றபோது பேச்சாளர்களாக வந்து சிறப்பித்தவர்களில்  கலைமாமணி திரு.ஏர்வாடி இராதாகிருஷ்ணன், திருமதி.கிரிஜா ராகவன், முனைவர் நெல்லை  திரு. முத்து, பிரபல பேச்சாளர் திரு. கவி.முருகபாரதி, மணிவாசகர் பதிப்பகத்தின் மேலாளர் திரு.இராம.குருமூர்த்தி போன்றவர்கள் மேடைக்கு அழைத்து பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டனர்.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் முனைவர் அவ்வை அருள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி மற்றும் நடனபோட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதையும் படியுங்கள்:
அழகுக்கு அழகு சேர்க்கும் மருதாணி!
பாரதி உலா நிறைவு விழா...

மேலும் பாரதி உலா அன்பர்களுக்கும் களப்பணியாளர் களுக்கும்  பாராட்டு பத்திரங்களை வழங்கி சிறப்பித்தார். தனது சிறப்புரையில், பொதுச்செயலாளர் திரு. உதயம்ராம் ஆணிவேராக இருந்து  பாரதி உலா நிகழ்ச்சிகளை திறம்பட  திட்டமிட்டு சிறப்பாக நடத்துகிறார் என்றும் பாராட்டினார்.

இணைப்புரை வழங்கிய , உரத்தசிந்தனை சங்கத்தின் தலைவர் பத்மினி பட்டாபிராமன் மற்றும் பொதுச்செயலர் உதயம் ராம் நிகழ்ச்சியை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

logo
Kalki Online
kalkionline.com