32 வயதில் ஒரு ஜாம்பவானை வீழ்த்திய 'மரண அடி'! புரூஸ் லீயின் விசித்திரமான மரணத்திற்கு இதுதான் காரணம்!

Bruce lee and water
bruce lee Excess consume of water
Published on
Kalki Strip
Kalki Strip

புரூஸ் லீ(Bruce Lee)யைத் தெரியாமல் உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். உலகத் தற்காப்பு கலை கராத்தேவில் உச்சம் தொட்டவர். அது மட்டுமல்ல. அவர் ஹாலிவுட் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது ‘என்டர் தி டிராகன்’ திரைப்படம் உலகையே ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது. கராத்தே பற்றி பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன.

ஆனால், அவரது சாதனை நீடிக்கவில்லை. இளம் வயதிலேயே அவர் மரணம் அடைந்தார். இது குறித்து பல்வேறு கண்ணோட்டம் வந்தது. அவருக்கு விஷம் உணவிலே கலந்து கொடுத்து விட்டார்கள் என்று உலகம் முழுக்க நம்பியது. கராத்தே புலியை எதிரிகள் கொன்றுவிட்டனர் என்று உலகம் முழுக்க நம்பியது.

ஆனால், சில வருடங்களுக்கு முன் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் புரூஸ் லீயின் பிரேத பரிசோதனை செய்து அதிர்ச்சி மிக்க தகவல் வெளியிட்டு உள்ளது. புரூஸ் லீ விஷத்தால் சாகவில்லை. அவரது மூளையில் இருந்த கட்டிதான் காரணம் என்று அடித்து சொல்லியது.

சற்று விரிவாக இதை பார்ப்போம். புரூஸ் லீ தனது உடலை ஆரோக்கியமாக வைக்க வேண்டும் என்று உணர்ந்து அதிகம் தண்ணீர் குடித்தார். இது அவருடைய சுபாவம். ஒரு லிட்டர் இல்லை, இரண்டு லிட்டர் இல்லை. சுமார் 10 - 12 லிட்டர் தண்ணீர் குடித்து உள்ளார்.

தண்ணீர் அதிகம் குடித்ததால் (Excess consume of water) அதில் உள்ள ‘சோடியம்’ என்ற ரசாயனம் அவரது மூளையில் தங்கி கட்டி ஆக வளர்ந்துவிட்டக் காரணம்தான் புரூஸ் லீ மரணத்தின் மூலக்காரணம் என்று ஆய்வக முடிவுகள் சொன்னது. சிறுநீரகச் செயலிழப்பும் அவரது சாவுக்கு ஒரு காரணம்.

புரூஸ் லீ-க்கு தமிழ் பழமொழி ஒன்று தெரிந்து இருந்தால் நிச்சயமாக அவர் இந்தத் தவறை செய்து இருக்க மாட்டார். அது என்ன பழமொழி ? ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும்..!’ தண்ணீரும் தான்!

தண்ணீர் உடலுக்கு அவசியம். தண்ணீர் குடிக்க வேண்டும் தான். ஆனால், அதற்கு என்று ஒரேயடியாக 10, 12 லிட்டர் குடிப்பதா? தினமும் தண்ணீர் அளவு கடந்து குடித்ததின் காரணமாக மூளை வீக்கத்தால் மரணம் அடைந்தார். புரூஸ் லீ கதை நமக்கு நல்ல பாடம் கற்றுக்கொடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
பணக்காரன் ஆவதற்கு ஒரு சயின்ஸ் இருக்கு… 100 வருடம் பழமையான ரகசியம்!
Bruce lee and water

ஏற்கெனவே சொன்னதுதான். மிகவும் அதிகமான தண்ணீர் குடிப்பது ஆபத்து. அளவுக்கு மிஞ்சினால் தண்ணீரும் விஷமாகும்…!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com