
‘Hello’ வந்த கதை தெரியுமா?
முன்பெல்லாம் Land line ரிங்காகும். வேக வேகமாக ஓடிக் கொண்டே போய் receiver ஐ எடுத்து உடனே hello என்று சொல்வோம். இப்போது மொபைல்களின் உபயோகம் அதிகமாகி விட்டது. I phone, tab, போன்ற புதிய புதிய கைபேசிகள் வந்து விட்டன. ஆனாலும் உலகம் முழுவதும் இந்த hello சொல்வதை நிறுத்தவில்லை. மொபைலில் மணி அடித்தாலும் எடுத்து hello என்று தான் இன்று வரை சொல்கிறோம்.
அது மட்டுமா? Office meeting, மாணவர்களுக்கான team meeting எதுவாக இருந்தாலும், அது offline இல்லை online எதிலில் நடந்தாலும் எல்லோரும் கூறும் முதல் வார்த்தை hello என்ற சொல் தான்.
இன்னும் சொல்ல போனால் சாலையில் செல்லும் போதோ அல்லது பொது இடங்களிலோ முன்ன பின்ன தெரியாத நபரை நாம் எப்படி அழைக்கிறோம்? ஹலோ sir, ஹலோ brother ... என்று தானே?
சரி இந்த 'ஹலோ' எப்படி வந்தது என்று பார்க்கலாம்..
"தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல். சாதனத்தின் முதல் சோதனையின் போது 'ஹலோ' என்ற வார்த்தையை முதல் வார்த்தையாகப் பயன்படுத்தினார். 'ஹலோ' என்பது அவரது வருங்கால மனைவி மார்கரெட் ஹலோவின் பெயர். இந்த வார்த்தை விரைவில் உலகளவில் தொலைபேசி அழைப்புகளுக்கான நிலையான வாழ்த்துச் சொல்லாக மாறியது,... இன்றும் பயன்படுத்தப்படுகிறது..." என்று பல ஊடகங்களில் பகிரப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல.
அலெக்சாண்டர் கிரஹாம் பெல் 1876 ஆம் ஆண்டு தொலைபேசியைக் கண்டுபிடித்தார். ஆரம்பத்தில் தொலைபேசி உரையாடல்களுக்கு "அஹோய், அஹோய்" என்ற வாழ்த்துச் சொல்லைப் பயன்படுத்த பரிந்துரைத்தார். இருப்பினும், 1877 ஆம் ஆண்டில், தாமஸ் எடிசன் 'ஹலோ' என்ற வார்த்தையை தொலைபேசி வாழ்த்தாகப் பயன்படுத்த முன்மொழிந்தார்.
கிரஹாம் பெல் தொலைபேசியில் பேசிய முதல் வார்த்தைகளை ஆராய்ந்ததில், 1876 ஆம் ஆண்டு தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, முதல் வெற்றிகரமான தொலைபேசி அழைப்பு அவரது உதவியாளருக்கு (அவர் பக்கத்து அறையில் இருந்தார்) செய்யப்பட்டது என்றும், அவர் "திரு. வாட்சன் - இங்கே வாருங்கள் - நான் உங்களைப் பார்க்க விரும்புகிறேன்" என்றும் கூறினார் என்றும் கூறப்படுகிறது. தி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளின் அறிக்கையின்படி , 1877 ஆம் ஆண்டில், தாமஸ் எடிசன் 'ஹலோ' என்ற வார்த்தையுடன் தொலைபேசி உரையாடல்களைத் தொடங்க பரிந்துரைத்தார். எடிசன் தொலைபேசியை ஒரு வணிக சாதனமாகக் கருதியதால், மறுமுனையில் இருப்பவர் பேச விரும்புகிறார் என்பதைக் குறிக்க இந்த வாழ்த்து வார்த்தையைப் பயன்படுத்த அறிவுறுத்தினார். எடிசனின் ஆலோசனையைப் பின்பற்றி, மக்கள் 'ஹலோ' என்ற வார்த்தையை ஒரு நிலையான தொலைபேசி வாழ்த்தாக ஏற்றுக்கொண்டனர்.