பத்திரிகை உலக பிதாமகர் சாவி 107!

பத்திரிகை உலக பிதாமகர் சாவி 107!
Published on

இன்று  ஆகஸ்ட் 10. பத்திரிகை ஜாம்பவான் சாவியின் 107 வது பிறந்த நாள்.

சாவி சார் அமரர் கல்கியின்  சீடர். நான் சாவி சாருடைய  பிரதான சிஷ்யை. அப்படியானால் அமரர் கல்கி எனக்கு பரமகுரு.

சாவி சார் பற்றி நாள் முழுக்க பேச விஷயம் இருக்கும்போது ஒரு  மினி   கட்டுரை மட்டுமே எழுத நேர்வது பெரிய சவால்.

« « « «

வீனம்+புதுமை என்பதன் ஒரே பெயர் சாவி சார்தான்.

அவர் தினமணி கதிர்  பத்திரிகையில் செய்த புதுமைகளை (layout  முதல் content வரை) யாரும் செய்து இருக்க முடியாது.

அவருடன் அரை மணி நேரம் பேசினாலே போதும்... எழுத்து ருசி உள்ள யாருக்குமே ignite ஆகிவிடும். அவ்வளவு motivation இருக்கும் அவரது பேச்சில்..

‘சபாஷ்! நன்னா வருவே. sky is the limit...’ என்று பாராட்டுவார். அதேபோல எழுத்தாளர், ஆர்டிஸ்ட், சினிமா ஆட்கள், கலைஞர்கள் யாராவது பளிச் என்று பட்டால் உடனே அழைத்து பாராட்டி பேசுவார்.

« « « «

கைச்சுவை உணர்வு மிக்கவர். ‘அன்பே வா  படம் ஏன் சூப்பர் ஹிட் ஆச்சு தெரியுமா? நான் அதுல நடிச்சு இருக்கேனே அதனால்’ என்பார் காமெடியாக..

ம்ம்… புதிய வானம்.. புதிய பூமி பாடல் ஒளிபரப்பு. ஆனால் நான் என் கை வேலை எல்லாம் ஒதுக்கி விட்டு TV முன்பு உட்கார்ந்து விடுவேன். எம்.ஜி.ஆர் பாடிக்கொண்டே வர பின்புலத்தில் சில டூரிஸ்டுகளை காட்டுவார்கள். அதில் சாவி அவர்களும் சில விநாடிகள் தோன்றுவார்.

« « « «

சாவி சார். சூப்பரா எடிட்டிங் டிப்ஸ், தலைப்பு வைக்குற டிப்ஸ் எல்லாம்  தருவார்.

சாவிக்கு  பிடிக்காத ஒரு மெகா விஷயம் எழுத்துப் பிழை.

"நெய்யும் முந்திரிப் பருப்புமாவே போட்டு செஞ்ச சர்க்கரைப் பொங்கலாகவே இருக்கட்டுமே. நறுக்குன்னு ஒரு கல்லு கடிபட்டா  முகம் சுளிப்போம் இல்லையா? அது மாதிரி எவ்வளவு தரமான கட்டுரை ஆகவே இருந்தாலும் எழுத்துப்பிழை, சந்திப்பிழை இருந்தா படிக்கிற வங்களுக்கு  எரிச்சலாதான் வரும். நல்ல தமிழ் எழுதணும்னா தினமணி, கல்கி தலையங்கம் வாசி!” என்பார்.

ஆனால் நான் சாவி சாரிடமிருந்து proof படித்து வரும் பக்கங்களைப் பார்த்தே பிழை திருத்த கற்று கொண்டு விட்டேன்.

« « « «

‘ஒவ்வொரு issueவும் ஊட்டி கேரட் போல  தளதளன்னு இருக்கணும்’ என்பார். எல்லா இதழ்களையும் தீபாவளி கொண்டாடுவது போல  தயார் செய்யணும். திவசமாட்டம் பண்ணக் கூடாது. திவசத்துக்கு நாலு வாழைக்காய், ஒரு பிடி  எள்ளு போதும். ஆனா, தீபாவளிக்கு பட்டு, பட்டாசு, பலகாரம் எல்லாம் வேணும் இல்லையா?’ என்பார்.

‘சொல்ல  வந்த விஷயத்தை  சுத்தி வளைக்காம  தெளிவா  சொல்லிடணும். சர்வர் மசால்  தோசையை கொண்டு வந்து வெச்சதும் கை நேரா மசாலாவை தானே தொடும். அது மாதிரி படிக்கிறவங்க point ஐ டக்குனு புரிஞ்சுக்கணும்.

« « « «

புதுமையான விஷயங்களின் முன்னோடி சாவி சார்தான்.

வெள்ளி மணி, சாவி, தவிர சுஜாதா, மோனா, பூவாளி,  திசைகள், விசிட்டர், லென்ஸ் என விதவிதமான பத்திரிகைகளை தொடங்கியவர்.

எதிர்காலத்தில் தொலைகாட்சி  ஆக்கிரமிக்கும் என்று துல்லியமாக முன்கூட்டியே  கணித்து 'antenna' என்று ஒரு  இதழையும் ஆரம்பிக்க இருந்தார்.

« « « «

காலையில் எழுந்ததும் முரசொலி படித்து முடித்த கையோடு கலைஞரிடம் பேசி  விடுவார்.  கலைஞரும் சாவியிடம் மிகுந்த அன்பு கொண்டு இருந்தார்.

சாவி 85 புத்தக வெளியீட்டுக்கு எனக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு அனுப்பி phone இல் பேசி "வந்துடும்மா சேகர்" என்றார்.

ராணி மைந்தனை ராணி என்பார். என்னை சேகர் என்று அழைப்பர்.

நாரதகான சபாவில்  சாவி சாரின் உற்ற நண்பர் ஜி கலைஞர் முன்னிலையில் மேடையில் பேசி கொண்டு இருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு அவர் கரம் பற்றியே மறைந்து விட்டார்.

« « « «

த்திரிக்கை உலகம்  இப்போது போல அப்போது இல்லை. அதுவும் இளம் பெண்கள் நுழைவது எல்லாம் சாத்தியமே இல்லாத காலம்.

அப்படிப்பட்ட ,சாவியில் சேர நான் செய்த உத்தி என்ன தெரியுமோ?

"பிள்ளையாரின் மோதகக் கையாலும் சாவி சாரின் மோதிரக்கையாலும் குட்டு பட ஆசை " என்று இரண்டே வரி அப்ளிக்கேஷன் எழுதி போட்டதுதான்…

« « « «

‘எதுக்கு பெரிசா எழுதறே??. எது எழுதினாலும் உன் செலவுல அமெரிக்காவுக்கு தந்தி அடிக்கிற மாதிரி  நெனச்சிக்கிட்டு சுருக்கமாக சுவையாக எழுதணும். அப்பதான் வாசகர்களுக்கு பிடிக்கும்.’

இது அவருடைய அட்வைஸ்..

ஆகவே… குருவே சரணம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com