
! எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வி சென்று சேர வேண்டும். “உணவில்லை , சாப்பிடவில்லை” என்ற காரணம் காட்டி குழந்தைகள் பள்ளிக்கு வராமல் இருந்துவிடக் கூடாது. வயிற்றுக்குச் சோறிட்டு செவிக்கு உணவு என்பதே சரியான வழி. இந்த நற்திட்டம் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் கல்வியைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். நல்ல உடல் நலனும் அறிவுத்திறனும் தெளிவான சிந்தனையும் கொண்ட எதிர்காலத் தலைமுறை உருவாக இது வழிவகுக்கட்டும். மணிமேகலையும், வள்ளலாரும், பாரதியும் மகிழ்ந்திருப்பார்கள்.
! வரும்... சோனியா / ராகுலின் ஆதரவு பெற்ற வேட்பாளர் வெற்றி பெறுவார்.
! கடந்த தேர்தலில் சில நூறு ஓட்டுக்களில் வெற்றிவாய்ப்பை இழந்தவர். விலகியதற்கு காரணம் “தன் உடல் நிலை” என்று அவர் அறிவித்திருந்தாலும் உண்மையான காரணம் “உட்கட்சி உரசல்கள்” தான்.
! அம்மையார் மெல்ல மெல்ல அரசியல் செய்ய கற்றுக்கொண்டு வருகிறார்.
! போர் செய்வதற்கென்று ஒரு காலம் இருக்கிறதா என்ன? “எந்தக் காலத்திலும் போர் இல்லாமல் அமைதியான உலகம் அமைய வேண்டும்” என்பது தானே பிரதமரின் அறிவுறுத்தலாக இருந்திருக்க வேண்டும்.
! “எந்தக் காலத்திலும் போர் இல்லாமல் அமைதியான உலகம் அமைய வேண்டும்”இந்தியாவில் கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படும் ஈடன் கார்டன் மைதானம், 1997ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் பந்தை நாலாபுறமும் அடித்து நொறுக்கினார். இந்தியாவின் மேற்கு வங்கத்தில் ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந்த ஜூலான் கோஸ்வாமி என்ற 15 வயது பெண், அங்கு பந்து பொறுக்கிப்போடும் பெண்ணாக மைதானத்தில் இருந்தார். ஆஸ்திரேலியாவின் விளையாட்டை திகைத்துப் பார்த்த ஜூலான் கோஸ்வாமி கிரிக்கெட்தான் தன்னுடைய வாழ்க்கை என்பதை முடிவு செய்தார். சவால்களுக்கிடையே பயிற்சிகள், போட்டிகளை கடந்து வந்த இந்த கிராமத்துப்பெண், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 2002ஆம் ஆண்டு அறிமுகமாகி, இருபது ஆண்டு புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு, 39 வயதான ஜூலன் கோஸ்வாமி 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே நாட்டிற்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் செப்டம்பர் 24 நடைபெற்ற போட்டியோடு ஓய்வுபெற்றார் இந்த சாதனைப்பெண். கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் ஐசிசியின் தரவரிசைப் பட்டியலில் முதலிடமும் பிடித்தவர். ஐசிசியின் சிறந்த பெண் வீராங்கனை விருதை வென்ற முதல் இந்திய பெண் ஜூலான்தான்.
! மோடி அரசை எதிர்ப்பவர்களுக்கு சூட்டபட்டிருக்கும் கெளரமான பெயர் இந்த “அர்பன் நக்ஸல்கள்” . சுற்றுபுறச் சூழலைப் பாதுகாக்க தேசிய அளவில் தனித் திட்டம் அறிவித்த இந்த பிரதமர் தான் இதையும் சொல்லுகிறார்.
! மனிதருக்கு அபாரமான தன்னமிக்கை. 2024க்குள் கட்சி பூசல்கள் எல்லாம் தீர்ந்து இவரது ஒற்றைத் தலைமையை தொண்டர்கள் ஏற்று பா.ஜ.க.வை ஒதுக்கிவிட்டு 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவாராம்.
! ‘தியாகம்’ என்பது மற்றவர்களுக்குத் தெரிவதற்காகச் செய்வதில்லை. அது செய்பவரின் மனத்திருப்திகாக செய்யப்படும் ஒரு மதிப்பிற்குரிய செயல். “சில தியாகங்களினால் பலன் பெற்றவர்களுக்குகூட அதைச் செய்தவர் யார் என்று தெரியாது” என்ற வகையில் செய்யபடுபவை.
! இந்த இதழின் தலையங்கம் பாருங்கள்.
! மனம் திறந்த பேச்சு. அதில் வெளிப்பட்டது பொன்னியன் செல்வனின் பெருமையைவிட மணிரத்தினத்தின் தனித்திறமையும் துணிவும்தான். விழாவில் பேசிய ரஜினிகாந்த் மட்டுமே தனது உரையில் கல்கியைப் பற்றியும் அவரது எழுத்துத் திறனைப் பற்றியும் விரிவாகப் பேசினார்.படித்ததும் கல்கியின் காலில் விழுந்து மரியாதை செய்ய நினைத்தேன் என்றார்.பல்வேறு ஆளுமைகளை வகைப்படுத்துவதில் கல்கியின் திறனை அவர் அழகாக விளக்கியதுதான் அந்த விழாவில் மகிழ்ச்சியான விஷயம்
! சில மருந்துகளை உட்கொள்ளும்போது உடல் நலம் பாதுகாக்கப்பட்டு விடும். ஆனால், சில மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். “ஜனநாயகம்” என்ற மருந்து நம் நாட்டை காப்பாற்றிவிட்டது. ஆனால், லஞ்சமும், ஊழலும் பக்கவிளைவுகளாகிவிட்டது.
! மர்மா? “அப்படி ஒன்று இருக்கிறது” என்று சொன்னவர், விசாரணை கமிஷனின் முன் கடசியில் ஆஜராகி பின்வாங்கிவிட்டார். ‘அப்போலோ மருத்துவமனை சிகிச்சைகளை எல்லாம் சரியாகத்தான் செய்திருக்கிறது’ என்று எய்ம்ஸ் வல்லுனர்கள் அறிக்கை தந்துவிட்டார்கள். இப்போது மர்மம் எல்லாம் ‘‘ஏன் இன்னும் அரசு, கமிஷனின் முடிவுகளின் அடிப்படையில் அறிவிப்பு வெளியிடவில்லை’’ என்பதுதான்.
! 2014ஆம் ஆண்டிலிருந்து 2019 வரை ஐந்தாண்டுகள் இழுத்தடித்து அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு மோடி அடிக்கல் நாட்டியது 2019 ஜனவரியில். அப்போது 2022 செப்டம்பருக்குள் பணி முடிக்கப்படும் என்றார். ஆனால், இன்னும் வேலையையே தொடங்கப்படவில்லை.
“தலைவர் நட்டா சொன்னது 95% பணி பூர்வாங்கப்பணிகள். முழுப்பணிகள் என்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது” என்று அமைச்சர் முருகன் விளக்கம் கொடுக்கிறார். அடிக்கல் நாட்டி மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகுதான் பூர்வாங்கப் பணிகளே முடியப் போகிறது என்றால்... எய்ம்ஸ் வருவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? அந்த முருகனுக்குத்தான் வெளிச்சம்.