முன்கதைச் சுருக்கம்!

தோழி – பாகம் 1
முன்கதைச் சுருக்கம்!
Published on

அன்பார்ந்த வாசகர்களே !

எழுத்தாளர் மாலன் அவர்களின் 'தோழி ' (பாகம் - 1)

தொடருக்குக் கிடைத்த ஏகோபித்த வரவேற்பினைத் தொடர்ந்து - ஒரு சிறிய இடை வேளைக்கு பிறகு - மீண்டும் வருகிறாள் 'தோழி ' (பாகம் - 2). விறுவிறுப்பான தொடரைப் படித்து மகிழத் தயாராகுங்கள்.

தோழி – பாகம் 1

முன்கதைச் சுருக்கம்:

பெரியவர் என்று எல்லோராலும் அழைக்கப்படும் மக்கள் செல்வாக்குக் கொண்ட ஓர் அரசியல்தலைவர் தன்னுடைய வயது மூப்பின் காரணமாக தனக்குப் பின் கட்சியை நடத்த கெட்டிக்காரர் ஒருவரைத் தேர்வு செய்கிறார்.அவரது தேர்வு வித்யா என்ற நடிகை.

வித்யாவிற்கு மக்களை வசீகரிக்கும் ஆற்றல் இருக்கிறதா என அறிந்து கொள்ள அவளை ஒரு கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்து அதை அவளுக்குத் தெரியாமல் வீடியோ பதிவு செய்து பார்க்கிறார். பின்னர் வீடியோ பதிவு செய்ய நியமிக்கப்பட்ட சித்ராவையே வித்யாவின் வீட்டில் வேலைக்கு அமர்த்துகிறார். அவளது அரசியல் பணிகளுக்கு உதவியாக சித்ராவின் கணவன் சாமிநாதன் நியமிக்கப்படுகிறான். ஆனால் சித்ராவும், சாமிநாதனும் தம்பதிகள் என்ற விஷயம் வித்யாவிடமிருந்து மறைக்கப்படுகிறது

பெரியவரின் கட்சியில் வித்யாவிற்கு எதிர்ப்பு எழுகிறது, பெரியவரின் நீண்ட நாள் விசுவாசிகளில் முதன்மையானவரான முருகய்யன். எதிர்ப்பு வேலைகளில் மறைமுகமாக ஈடுபடுகிறார். அரசியலில் வெற்றி பெற வேண்டுமானால் மகாபாரதம் பார் எனப் பெரியவர் கேஸட்கள் அனுப்புகிறார். “பலத்தால் வெல்ல முடியாத எதிரிகளை .அவர்களது பலவீனத்தால் வீழ்த்த முடியும்” என்று சொல்லும் காந்தாரியை வித்யாவிற்கும் சித்ராவிற்கும் பிடிக்கிறது

சித்ராவும் அவள் கணவன் சாமிநாதனும் வித்யாவின் நடவடிக்களை அவளுக்குத் தெரியாமல் கண்காணிக்க பெரியவரால் நியமிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என்று வித்யாவிற்கு அவளது தோழி மூலம் தெரிவிக்கப்படுகிறது. சினம் கொண்ட வித்யா

இருவரையும் வேலையிலிருந்து நீக்குகிறாள். கடும் கோபத்துடன் பெரியவரிடம் சண்டையிடக் கிளம்புகிறாள். ஆனால் பெரியவர் திடீரென்று மயக்கமடைந்து உடல் நலம் குன்ற சிகிச்சைக்காக அயல்நாடு அனுப்பப்படுகிறார்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com