? இமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் அறிவித்து விட்டார்களே?- நந்தினி, மதுரை! அதே நேரத்தில் குஜராத்துக்கு அறிவிக்கவில்லை என்பதை கவனித்தீர்களா? “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்பதில் பா.ஜ.க. நம்பிக்கை இழந்து வருவதைத்தான் இது காட்டுகிறது. ? 3D பிரிண்டிங் என்பது என்ன? - செல்வகுமரன், தென்காசி .! கடந்த 10 ஆண்டுகளில் பிறந்த அறிவியலின் சாதனை “3டி பிரிண்டிங்” எனும் தொழில்நுட்பம். பிரிண்டிங் என்றால் சும்மா பேப்பரில் பிரிண்ட் செய்வதை எல்லாம் தாண்டி, நமக்கு எது தேவையோ அதை நேரடியாக பிரிண்ட் செய்து உருவாக்கிக் கொள்ளலாம். தேவைப்படும் சாமான்கள், பொம்மைகள், பாத்திரங்கள், இயந்திரங்களின் ஸ்பேர் பார்ட்ஸ்கள் என்று ஆரம்பித்து, தேவைப்படும் உணவைக் கூட 'பிரிண்ட்' செய்து கொள்ளலாம். தமிழ் நாட்டில் முதன் முதலில் சிறு சிற்ப சிலைகள் வடிக்க பூம்பூக கைவினைகளை நிறுவனம் முயற்சி செய்தது. உலகலளவில் இப்போது அதையெல்லாம் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்று மானுட பாகங்களைக்கூட 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் செய்து கொள்ளும் ஆராய்ச்சி வலுவடைந்து வருகிறது . சில வருடங்களில் 'உங்க லிவர் பழுதாகி விட்டது,' என்று டாக்டர் சொன்னால் 'இருங்க புது லிவர் ஒண்ணு 3D பிரிண்ட் பண்ணி எடுத்துக்கிட்டு வந்துர்றேன்,' என்று சொல்லி விடலாம் என்ற நிலை கூட உருவாகலாம். ? தற்கால இலக்கிய வாதிகள் 'ஆளுமை ' மிக்கவர்களாக இல்லாமல் இருப்பதற்கு யார் காரணம்?- நெல்லை குரலோன், பொட்டல்புதூர் ! உண்மையான இலக்கியவாதிகள் வாசகர்களால் உருவாக்கப்படுபவர்கள். அச்சு உலகம் கோலொச்சிக் கொண்டிருந்த காலத்தில் இவர்கள் எளிதில் அறியப்பட்டார்கள். ஆனால், இன்று தங்களையே சமூக ஊட்கங்களில் விளம்பரப்டுத்திக்கொண்டு வாசக பரப்பை உருவாக்கிக்கொள்பவர்கள் அதிகமாகிக்கொண்டிருக்கிறார்கள். இந்த போலிகளில் சிலர் அருவெறுப்பு ஊட்டும் படைப்புகளையும் உருவாக்கிக்கொண்டிருப்பதுதான் அவலம். ? பசும்பொன் தேவரின் குரு பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளப்போகிறார்!!...என்ற தகவல் பற்றி?..- கே.ஆர்.ஜி. ஶ்ரீமான், பெங்களூரு.. ! வாய்ப்பில்லை. இது தமிழக பாஜகவினரின் விருப்பமாகிருக்கலாம், ஆனால் இதன் பின்னே இருக்கும் அரசியல் புரிந்த அவர்களின் டெல்லி தலமை இதை விரும்பாது. ? பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதித்தால் என்ன? நிஜமாகத்தான் கேட்கிறேன்!- பி. ஆர். நாகராஜன், செம்பனாா்கோவில் .! தரம் தாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதால் ஒரு டிவி நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமென்றால் இன்று தமிழக சானல்கள் பலவற்றை தடை செய்ய வேண்டும். இது பிஸின்ஸ். என்பதல் முடியாது. வணிகவியலில் “ வாங்குவோர் கவனமாகயிருக்க வேண்டும்” என்ற சொல்லாடல் உண்டு. அது இதற்கு சரியாக பொறுந்தும். ? நடிகை நயந்தாராவிற்கு இரட்டை குழந்தைகள் ?- வாசுதேவன் ,பெங்களூரு.! ஒரு தம்பதியரின் தனிப்பட்ட, ரகசியம் காக்க வேண்டிய விஷயம் அவர்களாலேயே விளம்பரபடுத்தப்பட்டு பொதுவெளியில் விவாதிக்கப்படுவது இன்றைய சமூக சூழலின் அவலங்களில் ஒன்று. ? ரஷ்ய - உக்ரைன் போர் என்பது அநாகரீகத்தின் உச்சம் தானே?- மஹாலட்சுமி, திண்டுக்கல்! இந்தப் போர் மட்டுமில்லை, உலகில் நடக்கும் எந்தப் போருமே அப்பாவி மக்கள் பெற்றிருக்கும் சாபம். போர்கள் அந்த நாடுகளின் தலைமையில் உதித்த அநாகரிக எண்ணங்களில் அடையாளம். ? தி.மு.க. பொதுக்குழுவில் அதன் தலைவரின் பேச்சு ?- வண்ணை கணேசன், சென்னை ! துணிவான மனந்திறந்த பேச்சு. மக்களின் எண்ணங்களை கட்சிக் கூட்டத்தில் தன் பேச்சில் பிரதிபலிப்பதித்தின் மூலம் தன் இமேஜை உயர்த்திக்கொண்டிருக்கிறார். நிர்வாக இயலில் சீனியர்களின் தவறுகளை சுட்டிகாட்ட உயர்மட்ட கூட்டங்களில் அவர்கள் செயலை தலைமை பொதுப்படையாக விமர்சிப்பது என்பது நிறுவனத்தில் பலருக்கும் செல்லும் செய்தி என்று முறை பின்பற்றபடுகிறது, அதைத்தான் ஸ்டாலின் முயன்று பார்த்திருக்கிறார். பலனளிக்காவிட்டால் அம்மா பாணியை கையிலெடுக்கலாம். ? இன்றைய அ.தி.மு.க.வின் நிலை?- பள்ளிப்பாளையம், கே.ரமேஷ்.! ஜெ.வுக்குப் பிறகு இரட்டைத் தலைமை ஏற்று அவர் பெற்றுத் தந்த தேர்தல் வெற்றியை வைத்து நாலரை வருடம் ஆட்சி பலனால் பெற்ற பண பலத்தால் சுயமாக தேர்தல்களை சந்திப்பதோ வெற்றி பெறுவதோ சாத்தியமில்லாமல் போய்விட்டது. ஆளுமையுடைய அடுத்த கட்ட தலைவர்களை உருவாக்கத் தவறியதன் பலனை இன்று அ.தி.மு.க. அனுபவிக்க ஆரம்பித்து இருக்கிறது. ? ஏமாறுவது... ஏமாற்றுவது... எது சுலபம்?- எஸ்.ராம்தாஸ், சேலம்! ஏமாறுவதுதான். ஏமாற்ற புத்திசாலித்தனம் தேவை. அது இல்லாதால் தானே ஏமாறுகிறார்கள். ? முகநூலில் வரும் மீம்ஸ்களைப் பார்க்கிறீர்களா? - கே.பாலமுருகன், பெருநாழி.! கவுண்டமணி, வடிவேலு படங்களுடன் வெளியாகும் மீம்ஸ் கிண்டல்களில் பல ரசிக்க வைக்கிறது. ஆனால், படங்களை பொருத்தமாக இம்மாதிரி தலைப்புகளுடன் வெளியவதுதான் என்னைக் கவர்கிறது. இது ஒரு சாம்பிள்.