

அவள் வேகமாக கடையை நோக்கி வந்து கொண்டிருந்தாள் . வரும்போது சணல் சாக்கு பையை எடுத்து வந்து கொண்டிருந்தாள். கேனை வீட்டில் மறந்து வைத்த ஞாபகம் அவளுக்கு அப்பொழுதுதான் வந்தது. மறுபடியும் வீட்டிற்கு செல்வதென்றால் இரண்டு மைல் தொலவு எப்படி செல்வாள் பாவம்? ஒரு வழியாக வரும் பாதையில் ஒன்றரை லிட்டர் வாட்டர் கேன் கீழே கிடந்தது. அதை பார்த்தவுடனே அவளுக்கு ஒரே மகிழ்ச்சி. அதை கையில் எடுத்துக்கொண்டு ஒரு வழியாக கடையை வந்தடைந்தாள்.
எல்லோரும் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். இவளும் கையில் கேனை வைத்துக் கொண்டு வரிசையில் சேர்ந்து கொண்டாள். வரிசை நீண்டு கொண்டே சென்றது. படிப்படியாக ஒவ்வொருவரும் வரிசையில் இருந்து மெல்ல நகர்ந்து கொண்டே இருந்தனர். இவளும் தன்னுடைய கூப்பன் அட்டையை கொடுத்து பதிவு செய்து கொண்டாள்.
10 கிலோ அரிசி, 2 லிட்டர் பாமாயில், 1 கிலோ துவரம் பருப்பு, சீனி 1 கிலோ, சீமெண்ணெய் 2 லிட்டர் இவளுக்கு துண்டு சீட்டில் எழுதிக் கொடுக்கப்பட்டது. அரிசி, பருப்பு, பாமாயில், சீனி ஆகியவற்றை வாங்கிவிட்டு சீமெண்ணெய் ஊற்றும் இடத்தை நோக்கிச் சென்றாள்.
பதிவு செய்து எழுதிக் கொடுத்த துண்டு சீட்டினை அவரிடம் கொடுத்தாள்.