“தலைவருக்கு உண்டியல் சின்னம் ஒதுக்கியிருக்காங்களா?”
இல்லை... ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'ன்னு ஏதோ புத்தகத்துல படிச்சாராம், அதான்.”
“டாக்டர், என் வயத்துல இப்ப நாலு நாளாதான் எரிச்சல் இருக்கு.”
“ புதுசா கார் வாங்குன பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்துப் பொறாமைப்படுவதை முதல்ல நிறுத்துங்க, பிறகு எல்லாம் சரியாயிடும்.”
“உங்க பத்திரிகைல ஒரே ஷாக்கிங் நியூஸா வருதே சார்…?”
“அது “மின் இதழ்” ஆச்சுங்களே அதான் அப்படி…”
“ஒரு பேய்ப்படம் எடுத்து முடிச்சிருக்கேன். அதுக்குப் பொருத்தமா ஒரு டைட்டில் சொல்லுங்க சார்.”
“சொந்தக் காலில் நிற்கணும்.”
“அப்பா, உனக்கு ஞாபகமறதி குணமாயிடுச்சுன்னு ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்க”
“ரொம்ப சந்தோஷம். ஆமா நீங்க யாரு?”
“டாக்டர், தினம் தினம் இவரோட குறட்டைச் சத்தம் தாங்க முடியல .”
"கவலையை விடுங்க மேடம். இப்போ புதுசா கண்டுபிடிப்பு வந்திருக்கு... இந்தாங்க உங்க காதுக்கு சைலன்ஸர் .”