

ஜப்பான்காரர்கள் எல்லா விஷயங்களிலும் முன்னோடிகளாக இருப்பார்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால், காதல், ரிலேஷன்சிப் போன்ற விஷயங்களை அவர்கள் கையாளும் விதமே வித்தியாசமாக இருக்கிறது.
இப்போது உங்களுடைய ரிலேஷன்சிப்பில் உங்களுக்கு விருப்பமில்லை என்று வைத்துக் கொள்வோம். அவர்களை நீங்கள் பிரேக் அப் அல்லது டைவர்ஸ் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அந்த தப்பு உங்கள் மீது வராமல் எதிர்த்தரப்பினர் மீது போக வேண்டும் என்று நினைத்தால் ஜப்பான் மக்கள் இந்த ஒரு சர்வீஸை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த சர்வீஸின் பெயர் Wakaresaseya என்பதாகும்.
இவர்களிடம் காசு கொடுத்தால் போதும். உங்கள் பார்ட்னரை பற்றி முழுமையான தகவலை சேகரித்து விடுவார்கள். அவர் ஒரு மோசமான மனிதராக இருந்து உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தால் அதை உங்களிடம் வந்து தெரிவிப்பார்கள்.
அப்படி ஏதுமில்லாமல் அவர் ஒரு நல்ல மனிதராகவே இருந்தார் என்றால், இவர்களே உங்கள் இருவருக்குள்ளும் Misunderstanding ஐ உருவாக்குவார்கள். அதை ஒரு காரணமாக வைத்து நீங்கள் அவர்களுடன் பிரேக் அப் செய்து விடலாம்.
இது எதுவுமே வேலைக்கு ஆகவில்லை என்றால், அவர்களுடைய Genderல் இருக்கும் ஒரு நபரை அவர்களுடன் பிரெண்டாக நடிக்கச் சொல்லி அனுப்புவார்கள். அவர்களுக்கு ஏற்கனவே அந்த நபருக்கு பிடித்தது என்ன, பிடிக்காதது என்னவென்று தெரியும் என்பதால், இரண்டு பேரும் சுலபமாகவே பிரெண்டாகி விடுவார்கள். பிறகு நடிக்க வந்த அந்த பிரெண்ட் இவர்கள் வாழ்க்கையில் ஒரு Romantic interest ஐ அறிமுகப்படுத்தி வைப்பார். இப்போது அவர்கள் இருவரும் காதலித்து Cheat செய்து விட்டார்கள் என்றால், அந்த நபருடைய பார்ட்னர் இந்த காரணத்தை வைத்தே பிரேக் அப்போ டைவர்ஸோ வாங்கி பிரிந்து விடுவார்.
அப்படி அவர்கள் பிரிந்துவிட்டால், நடிக்க வந்த ஆட்கள் அவர் வாழ்க்கையில் இருந்து காணாமல் போய் விடுவார்கள். இவருக்கோ என்ன நடக்கிறது என்றே தெரியாது. சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் அவருடைய பார்ட்னரும் போய்விடுவார்.
புதிதாக வந்த பிரெண்ட் மற்றும் Love interest என்று அனைவருமே போய் விடுவார்கள். இவ்வளவு பிளான் போட்டு வேலை செய்வதால் தான் 5 லட்சம் முதல் 20 லட்சம் யென் வரை பணம் வாங்குகிறார்கள். இந்த சர்வீஸ் ஜப்பானில் Legal ஆகும். இதற்காக ஏஜென்சிஸ் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஜப்பானிய கலாச்சாரத்தில் மற்றவர்களை நேரடியாகப் புண்படுத்துவதைத் தவிர்க்க விரும்புவார்கள். அதனால் நயவஞ்சகமாக பிரிவதைத் தீர்வாகக் கருதுகிறார்கள். ஜப்பானில் விவாகரத்து மட்டுமல்லாமல், காதலியைப் பிடிக்காத பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவரிடமிருந்து பிரிக்கவும் இந்த சேவையைப் பயன்படுத்துகிறார்கள்.