கல்கிக்கும் கடலுக்கும், அலை ஓசைக்கும், பொன்னியின் செல்வனுக்கும் என்ன சம்மந்தம்?

ஓவியம்; பிள்ளை
ஓவியம்; பிள்ளை

ல்கியின் அலை ஓசை நாவலின் இறுதிக் கட்டத்தில் ஒரு காட்சி – பஞ்ச நதிகளில் ஒன்றான சேனாபில், சீதா படகிலிருந்து தண்ணீரில் விழுகிறாள். கல்கி இந்தக் காட்சியை எப்படி விவரிக்கிறார் என்று பார்ப்போம்.

முடிவில்லாத நேரம் சீதா தண்ணீருக்குள் கீழே கீழே கீழே போய்க் கொண்டிருந்தாள். பிறகு தன்னுடைய பிரயாசையின்றியே மேலே வருவதை உணர்ந்தாள். முகம் தண்ணீருக்கு மேலே வந்தது...

அலை  ஓசை...
அலை ஓசை...

அலை ஒன்று சீதாவை நோக்கி வந்தது. அது ஓர் அடி உயர அலைதான். ஆனால்... அது மலையளவு உயரமாகச் சீதாவுக்குத் தோன்றியது. பொங்கும் கடலைப் போல் ஓசை செய்துகொண்டு அந்த அலை விரைந்து வந்து சீதாவை மோதியது.

தலைக்கு மேலே வெள்ளம் ஓடிக்கொண்டே, ஓடிக்கொண்டே, ஓடிக்கொண்டேயிருந்தது. நெற்றியின் மேலே அலை மோதிக்கொண்டே, மோதிக்கொண்டே, மோதிக்கொண்டேயிருந்தது. காதில் 'ஹோ' என்று இரைந்த அலை ஓசை பல்லாயிரம் மக்களின் சோகம் நிறைந்த ஓலத்தை யொத்த அலை ஓசை, மற்ற எல்லா ஓசைகளையும் அமுக்கிக்கொண்டு மேலெழுந்த பேரலையின் பேரோசை கேட்டுக் கொண்டே, கேட்டுக்கொண்டே, கேட்டுக்கொண்டேயிருந்தது. தலைக்கு மேலே ஓடிய வெள்ளத்தின் பாரமும் நெற்றியில் மோதிய அலையின் வேகமும், காதில் தாக்கிய அலை ஓசை இரைச்சலும் முடிவில்லாமல், இடைவெளியில்லாமல் நீடித்துக்கொண்டே யிருந்தன.

ல்கியின் வர்ணனைத் திறமையைப் பற்றி, "தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற தமது நூலில் கி.வா. ஜகந்நாதன் எழுதுகையில் மேலே உள்ளதில் கடைசிப் பாராவை ஓர் உதாரணமாய்க் காட்டியுள்ளார்.

"இந்த வருணனையைப் பார்க்கும்போது கல்கியே தண்ணீரில் மூழ்கிவிட்ட அநுபவத்தை அடைந்திருப்பார் என்று எனக்குத் தோன்றுகின்றது” என்கிறார் கி.வா.ஜ.

கி.வா.ஜ,வின் ஊகம் சரியானதே. உண்மையிலேயே கல்கி சிறு பிள்ளையாய் இருக்கையில் தண்ணீரில் மூழ்கிச் செத்துப் பிழைத்தார். இதை “ஒரு விபத்து” என்பதாக கல்கியே வேறொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடுகிறார்.

பொன்னியின் செல்வனில்...
பொன்னியின் செல்வனில்...

பொன்னியின் செல்வனும் இதே போன்று கடலில் விழுந்து காப்பாற்றப்படும் சம்பவம் நினைவுக்கு வருகிறதல்லவா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com