வணிக அலசல் (business analytics) என்றால் என்ன?

வணிக அலசல் (business analytics) என்றால் என்ன?
Published on

ணிக அலசல் என்பது வணிகத்தின் கடந்த கால தரவுகளை (historical data) அலசி, வணிகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்டறிதல். இதனை காகிதத்தில் பேனா கொண்டு, கையாலும் செய்யலாம். ஆனால், மென்பொருள் (software) இதனை எளிதாக்குகிறது.

உதாரணமாக, ஒரு மிதிவண்டி நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம். அதற்கு பல்வேறு ஊர்களில் பல்வேறு கிளைகளில் மிதிவண்டிகள் விற்கப்படுகின்றன. பல்வேறு தினுசான மிதி வண்டிகள் விற்கப்படுகின்றன. பல்வேறு வண்ண மிதி வண்டிகள் விற்கப்படுகின்றன. ஆண்டின் பல்வேறு நாட்களில் மிதிவண்டிகள் விற்கப்படுகின்றன. பல்வேறு வயதினருக்கு மிதிவண்டிகள் விற்கப்படுகின்றன. பல்வேறு ஊழியர்களால் மிதிவண்டிகள் விற்கப்படுகின்றன.

  • இங்கு, விற்பனை சார்ந்த தரவுகள் - facts என்று அழைக்கப்படும், அதாவது உண்மைகள்.

  • விற்பனை சார்ந்த தரவுகளைச் சார்ந்த பரிமாணங்கள் - dimensions என்று அழைக்கப்படும். அதாவது எந்த வண்ணம், எந்த வயது, எந்த ஊரில், எந்த கிளையில், எந்த நாளில் போன்ற பரிமாணங்கள் அதாவது விற்பனை குறித்த பரிமாணங்கள் முக்கியமானவை. அவை விற்பனையை அலச உதவுகின்றன.

  • தரவு மாதிரி வரைப்படம் (data model diagram) என்றால் என்ன?

    இவை இரண்டையும் இணைத்து, ஒரு தரவு மாதிரி வரைப்படம் (data model diagram) உருவாக்கப்படும். ஒரு கட்டிடத்திற்கு எவ்வாறு கட்டிட மாதிரி வரைப்படம் உள்ளதோ, அதைப் போலவே விற்பனை குறித்த தரவுகளை சேமிக்க, தரவு மாதிரி வரைப்படம் முக்கியம். அதனை நட்சத்திர வரைப்பட திட்டம் (Star schema) என்று அழைப்பார்கள். தரவினை சுற்றி பரிமாணங்கள் இருப்பதால், அது நட்சத்திரம் போல் காட்சியளிக்கும். தரவுகள் மென்பொருள் என்பதால், அந்த நட்சத்திர திட்டம் ஒரு தரவு தளத்தில் (database) உருவாக்கப்பட்டு, அங்கு தரவுகள் சேமிக்கப்படும்.

 உதாரணமாக,

ஐந்து பச்சை மிதிவண்டிகள் சென்னை தாம்பரத்தில் உள்ள கோபால் மிதிவண்டிக் கடையில் 5வது ஜனவரி 2023 அன்று கோபால் என்ற ஊழியரால் விற்கப்பட்டது.

இந்த விற்பனை சார்ந்த தரவுகளையும் , பரிமாணங் களையும் இணைப்பதன் மூலம், நம்மால், மிதி வண்டி நிறுவனத்தின் விற்பனைக் குறித்து பல்வேறு அலசல்களை செய்ய முடியும். 

  • அதிகமாக விற்பனை ஆகும் மிதிவண்டியின் வண்ணங்கள் எவை ?

  • அதிகமாக விற்பனை செய்யும் கிளைகள் எவை ?

  • அதிகமாக மிதிவண்டி வாங்கும் வயதினர் யாவர் ?

  • கடந்த ஆண்டில் எவ்வளவு ரூபாய்க்கு மிதிவண்டி விற்பனை நடந்தது ?

Descriptive analysis and predictive analysis:

இதனை, descriptive analysis, விளக்க அலசல் என்று கூறுவார்கள். அதாவது, நடந்த விற்பனையைக் குறித்து, அலசி, அதனை விளக்குவது. விற்பனையைக் குறித்த பரிமாணங்களை அறிந்துக் கொள்வது.

அதே போல், ஏற்கனவே நடந்த விற்பனையைக் கொண்டு, எதிர்காலத்தில் எவ்வளவு விற்பனை நடக்கும் என்பதை குறித்த கணித்தலை, predictive analysis, கணிக்கும் அலசல் என்று கூறுவார்கள். இதற்கு பல்வேறு கணிதம் சார்ந்த சாம்யங்களைப் பயன்படுத்துவார்கள்.

இத்தகைய வணிக அலசல்கள் மூலம், நாம் நமது நிறுவனத்தினை எவ்வாறு வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வது என்பது தெளிவாகும். ஏதாவது சலுகைகள் வழங்க வேண்டுமா, ஏதாவது புதிய மிதிவண்டியை சந்தைப் படுத்த வேண்டுமா, விற்காத மிதிவண்டியின் உற்பத்தியை நிறுத்த வேண்டுமா என்று பல்வேறு விஷயங்களை திட்டமிட உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com