நந்தா விளக்கு என்றால் என்ன?

சொல்வதெல்லாம் தமிழ்!
நந்தா விளக்கு என்றால் என்ன?

ந்தா விளக்கு என்றால் 'தூண்டா விளக்கு' என்று பொருள். அதாவது, திரியைத் தூண்டிவிடத் தேவையில்லாத... தொடர்ந்து எரியும் விளக்கு!

அகல்விளக்கு, குத்துவிளக்கு போன்ற வகையான விளக்குகளின் எண்ணெய் கொள்ளுமிடம் மிகவும் சிறியதாக அமைந்திருக்கும். இதனால் அவற்றின் ஒளிவீசும் காலமும் குறுகியே இருக்கும்.

இதற்கு மாற்றாக வந்ததே தூண்டா விளக்கு! அதிகளவில் எண்ணெய் கொள்வதற்கென சிறப்பான தனிக்குடுவை போன்ற அமைப்புடைய இவ்வகை விளக்குகள் வெகுநேரம் எரிந்து ஒளிதரக்கூடியவை.
நந்துதல் - என்றால் முன்தள்ளுதல், தூண்டுதல்.
நந்து = தூண்டு. இதன் எதிர்மறைச் சொல்… நந்தா = தூண்டா!

நந்தா விளக்கு = தூண்டா விளக்கு! (திரியைத் தூண்டிவிடத் தேவையில்லாத விளக்கு) இச்சொல் அமைந்த விதத்தையும் விளங்கிக் கொள்வோம், வாருங்கள்!
முல் > முந்து > முந்துதல் எனும் சொல்லின் போலி நுந்துதல் ஆகும். (முனி > நுனி, முப்பது > நுப்பது எனச் சொல்வதையும் நோக்குக).
முந்து > நுந்து.
முந்துதல் > நுந்துதல்.
நுந்துதல் = உந்துதல், முன்வருதல்/முன்தள்ளுதல், மேலெழும்புதல், தூண்டுதல்.
இச்சொல் வளர்ச்சியின், அடுத்த நிலையில் உகரம் கெட்டு...
நுந்துதல் > நந்துதல் என வளர்தல், செழித்தல், தழைத்தல், பெருக்குதல் ஆகிய பொருள்களைக் குறிக்கும். (Perish, increase, prosperity).
நந்து > நந்தன் என்றால் செழியன், செழிப்பானவன், வளமானவன் எனப் பொருள் கொள்ளலாம்.
இல்லத்தில் செழித்து வளர்ந்த நம் மகன் 'நந்தன்' - எனப்படுவான்.

நந்தன் - ஆண்பால்.
நந்தனை - பெண்பால்.
நந்தனை - எனும் பெயரே தற்காலத்தில் நந்தினி ஆயிற்று .
திமிர்த்து, விடைத்த - திமில் பெருத்திருக்கும் மாடு நந்தி. சிவாலயங்களில் சிவனுக்கு முன்னிருப்பதும் நந்தியே! நந்தியம்பெருமாள் - என்றழைக்கப்படும் நந்தி இங்கு உருவகமாக 'பெருகிய நிலை' யைக் குறிக்கும்.

இதையும் படியுங்கள்:
முகப்பருவால் ஏற்பட்ட தழும்புகள் மறைய எளிய வழிகள்!
நந்தா விளக்கு என்றால் என்ன?

நந்துகளை மேய்ப்பவன் நந்தன். (இடையன்).
நந்தனின் மகன் = நந்தலாலா!
நந்தர்களின் கோ ( தலைவன்) = நந்தகோவன்.
நந்தகோவன் > நந்தகோபன் > நந்தகோபாலன்!
நந்தல் = வளர்க்கப்படுதல்!
நந்தல்வனம் > நந்தவனம் = மனித ஆக்கத்தில் வளர்க்கப்படும் செழிப்பான வனம்.
முன் வளர்ந்த ஓடு கொண்ட உயிரி = நந்து (நத்தை).

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com