ஒரு வழியாக அகில இந்திய காங்கிரஸுக்கு நேரு குடும்பத்தல்லாதவர் தலைவராக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் வரும் 17ம் தேதி நடக்க உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் 19ம் தேதி முடிவு அறிவிக்கப்பட உள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சித் தலைவரை தேர்வு செய்ய, ஜனநாயக முறைப்படி நடக்கும் இத்தேர்தலில் ராகுல் உட்பட காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை. இதற்கான காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கார்கே, சசிதரூர், திரிபாதி போட்டியிட: கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். .ராஜஸ்தான் முதல்வர் கெலாட் வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து அறிவித்தும் விட்டார். இவருக்கு சோனியாவின் ஆதரவு இருக்கிறது என்பது பரவலாக நம்பப்பட்ட ஒரு விஷயம். ஆனால், தேர்தலில் கெலாட் வெற்றி பெற்றால், அடுத்த ராஜஸ்தான் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தால் கெலாட், சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், கெலாட்டுக்கு பதிலாக சோனியாவின் ஆதரவுடன் திக்விஜய் சிங் அல்லது ஏ.கே.அந்தோணி போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகின. .இந்த பரபரப்பான சூழலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான்று , திடீர் திருப்பமாக கட்சியின் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும் மூத்த தலைவருமான மல்லிகார்ஜூனா கார்கே வேட்புமனு தாக்கல் செய்தார். இது ஒரு புதிய திருப்பம். வேட்புமனு தாக்கல் தொடங்கும் முன்பாகவே, திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்திருந்தார்.காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜூனா கார்கே, சசிதரூர், கே.என். திரிபாதி ஆகியோர் கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அசோக் கெலாட், திக்விஜய் சிங் ஆகியோர் போட்டியிலிருந்து விலகிக் கொண்டனர். ஏன் திக்விஜய் சிங் போட்டியிலிருந்து விலகிக்கொண்டார் என்பது விடுவிக்கப்படாத சஸ்பென்ஸ்.இதன் மூலம் இப்போது இரண்டு குதிரைகள் மட்டும்தான் ரேஸில், கார்கே, சசிதரூர் கட்சித் தலைவர் தேர்தலுக்கான போட்டியில் களமிறங்கி உள்ளனர். கர்நாடகா மாநிலம், பைதர் மாவட்டம், வராவட்டி பகுதியில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் மல்லிகார்ஜூனா கார்கே. தற்போது இவருக்கு வயது 80. தலித் சமூகத்தை சேர்ந்த இவர் அரசியலில் 50 ஆண்டுகால அனுபவம் மிக்கவர்.* தொடர்ச்சியாக 9 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளார்.* 2014 மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் மோடி அலை பலமாக வீசிய போது கூட, குல்பர்கா தொகுதியில் 74 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றவர். *கட்சி மேலிடத்தின் மிகவும் விசுவாசமான தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே. எதிர்க்கட்சி தலைவர்களுடனும் நல்லுறவை பராமரித்து வருபவர். இதன் காரணமாக, இவர் சோனியா ஆதரவு பெற்ற வேட்பாளராக கார்கே அறியப்படுகிறார்.கட்சி தலைமையில் மாற்றம் குறித்து முதலில் பேசியவர் சசி தரூர். தலைமை குறித்து விமர்சித்த ஜி23 எனப்படும் கட்சியின் 23 தலைவர்களில் ஒருவர். ஆனால் ஜி-23 தலைவர்களில் யாருமே சசிதரூரை முன்மொழியவில்லை. ஆச்சரியமாக , ஜி23 தலைவர்கள் ஒட்டுமொத்தமாக கார்கேவை முன்மொழிந்து அவரது வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.. “இந்த தேர்தல் சுதந்திரமான நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வதில் கட்சி உறுதியாக இருக்கிறது என்று சசி தரூர் அறிவித்திருந்தாலும், கார்கே தாக்கல் செய்த வேட்பு மனுவில், ஏ.கே.அந்தோணி, அசோக் கெலாட், திக் விஜய் சிங், பூபேந்தர் ஹூடா, மணிஷ் திவாரி, ஆனந்த் சர்மா, சல்மான் குர்ஷித், அம்பிகா சோனி, முகுல் வாஸ்னிக் போன்ற உயர்மட்ட தலைவர்கள் 30 பேர் அவரை பரிந்துரைத்து கையெழுத்திட்டு உள்ளனர். இதனால், கார்கே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. என்பது தெளிவாகிறது.ஆக , நேரு குடும்பத்தினரில் ஒருவர் நேரடியாக தலைமைப் பொறுப்பை ஏற்காவிட்டாலும் அவர்களின் ஆசி பெற்ற ஒருவர்தான் காங்கிரஸ் தலைவராகப்போகிறார்.