புவிசார் குறியீடு ஏன் வழங்கப்படுகிறது?

புவிசார் குறியீடு ஏன் வழங்கப்படுகிறது?

மீபத்தில் திருவண்ணாமலை ஐடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் மற்றும் திருநெல்வேலி வீரநல்லூர் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செடிபுட்டா புடவை உட்பட 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கப்பட்டது. 

இந்த பதிவில் இந்தியாவின் புவிசார் குறியீட்டின் வரலாறு, அது எப்படி தொடங்கப்பட்டது மற்றும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக ஆராய்வோம். 

புவிசார் குறியீடு என்றால் என்ன? 

வ்வொரு ஊரிலும் ஒவ்வொரு சிறப்பான பொருட்கள் இருக்கும். அது மற்ற ஊரில் உள்ள பொருட்களுடன் ஒப்பிடுகையில் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். அத்தகைய சிறப்பு மிக்க பொருட்களுக்கு அங்கீகாரம் செய்து கௌரவிக்கும் வகையில் கொடுக்கப்படுவது தான் புவிசார் குறியீடு. 

இந்தியாவில் புவிசார் குறியீடு எப்போது தொடங்கப்பட்டது?

ரு பொருள் உருவாகும் இடத்தின் பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துரைக்க மற்றும் அடுத்த தலைமுறைக்கு அதை பத்திரமாக கொண்டு சேர்க்க நினைத்து இந்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டதுதான் புவிசார் குறியீடு பாதுகாப்புச் சட்டம்.  இச்சட்டத்தை இந்திய அரசாங்கம் 1999ஆம் ஆண்டு அமல்படுத்தியது. 2003ம் ஆண்டுமுதல் இச்சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு இந்தியாவில் தனித்துவமாக இருக்கும் பொருட்களுக்கு இன்றுவரை புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஊரில் இருக்கும் அந்த ஊரின் சிறப்பான பொருட்களுக்கு புவிசார் குறியீடு வாங்கிக் கொள்ளலாம். 

புவிசார் குறியீடு ஏன் வழங்கப்படுகிறது? 

ந்தியா பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்கள் கொண்ட இடமாகும். இங்குள்ள ஒவ்வொரு மாநிலமும் அதன் தனித்துவமான விஷயங்களுக்குப் புகழ்பெற்றது. இத்தகைய தனித்துவமான தயாரிப்புகளை, ஒரே மாதிரி உருவாக்குதல் மற்றும் தவறாக பயன்படுத்துவதில் இருந்து பாதுகாத்து மேம்படுத்த, புவிசார் குறியீடு என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த குறியீடு நம்பகத்தன்மையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. சில தயாரிப்புகள் அவற்றின் சொந்த இடத்துடன் பிரத்யேகமாக தொடர்புள்ளதாகக் காட்டுவதை இந்தக் குறியீடு உறுதி செய்கிறது. 

புவிசார் குறியீடு எதன் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது?

ரு பொருளுக்கு இத்தகைய அந்தஸ்து கிடைக்க, அந்தத் தயாரிப்பின் புவியியல் தோற்றம், தனித்துவமான தரம், நற்பெயர் மற்றும் பிற குணாதிசயங்கள் முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. இது அந்தப் பொருள் உருவாகும் இடத்தின் காலநிலை, மண், பாரம்பரியம் மற்றும் மனிதர்களின் நிபுணத்துவம் போன்ற காரணிகளின் விளைவாக இருக்க வேண்டும். இவற்றின் அடிப்படையிலேயே ஒரு பொருளுக்கு புவிசார் அந்தஸ்து வழங்கப்படுகிறது. 

புவிசார் குறியீடு கிடைப்பதால் என்ன பலன்? 

ரு பொருளுக்கு புவிசார் குறியீடு கொடுக்கப்படுகிறது என்றால், அந்த ஊரில் உள்ள மக்களைத் தவிர, வேறு ஊர் மக்கள் அந்தப் பெயரைப் பயன்படுத்தி அதே மாதிரியான பொருளைத் தயாரிக்கக்கூடாது. உதாரணத்திற்கு திருநெல்வேலி அல்வா என்றால், அந்த ஊர் மக்கள் மட்டுமே அதேப் பெயரில் அதைத் தயாரிக்க முடியும். அதைத் தவிர வேறு ஊர்களில் திருநெல்வேலி அல்வா என்று தயாரித்து விற்கக் கூடாது. 

இதன் மூலமாக போலியாக தயாரித்து விற்பது தடுக்கப்படுவதானது மட்டுமின்றி, அந்தந்த ஊரில் உள்ள தொழிலாளர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும். இதனால் அப்பொருளை வாங்குவதற்கு அந்த ஊரைத் தேடி மக்கள் வருவார்கள். இதனால் அப்பொருளின் உற்பத்தி பெருகி ஏற்றுமதியும் அதிகரிக்கும். மேலும் அந்த குறிப்பிட்ட பொருளுக்கும், அது உருவாகும் ஊரில் உள்ள மக்களுக்குமான வரலாற்றுப் பிணைப்பு என்றும் மாறாமல் பாதுகாக்கப்படும். 

புவிசார் குறியீடு பெறுவதற்கு எப்படி பதிவு செய்வது?

முதலில் புவிசார் குறியீடு அந்தஸ்து வாங்க விரும்பும் தயாரிப்பைக் கண்டறிந்து, அவற்றை உற்பத்தி செய்யும் சங்கத்தில் இணைய வேண்டும். சங்கம் எதுவும் இல்லை எனில் புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும். இதுதான் விண்ணப்பத்தின்போது அந்தப் பொருளின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும். 

பொருள் குறித்த விரிவான ஆய்வு நடத்தி, அதன் வரலாறு, பாரம்பரியம், தனித்துவமான குணங்கள், குறிப்பிட்ட பகுதியுடனான தொடர்பு உள்ளிட்ட அனைத்தையும் ஆவணப்படுத்த வேண்டும். அதன் பிறகு புவிசார் குறியீடு வழங்கும் Geographical Indications Registry-ஐ தொடர்பு கொண்டால், நீங்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்த அனைத்தையும் அவர்கள் சொல்வார்கள். 

ipindia.gov.in இணையதளத்திற்குச் சென்று Contact Us பக்கத்தில் நீங்கள் அவர்களைத் தொடர்புகொள்ள முடியும். அவர்களிடமே பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தைப் பெற்று அனைத்தையும் பூர்த்திசெய்து, அந்த இணையதளத்திலேயே பதிவு செய்யலாம். இதற்கான பதிவுக் கட்டணமாக ரூபாய் 5000 செலுத்த வேண்டும்.  

இறுதியாக உங்களுடைய விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்தால், குறிப்பிட்ட அந்த பொருளுக்கான புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கப்படும். 

முடிவுரை: 

ந்தியாவிலேயே தமிழகத்தில் உள்ள பொருட்களுக்கு தான் அதிகமாக புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கப்பட்ட 430 பொருட்களில் 58 பொருட்கள் தமிழகத்தைச் சேர்ந்ததென்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 3 பொருட்களுக்கு புவிசார் அந்தஸ்து கொடுக்கப்பட்டு தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com