ஏன் இந்த தாமதம்?

ஏன் இந்த தாமதம்?
Published on

ய்ம்ஸ் மருத்துவமனை என்பது மருத்துவ கல்லூரியும் அதனுடன் இணைந்த மருத்துவ மனையும். அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆய்வுக்கூடங்கள், அறுவைசிகிச்சைவசதிகள் கொண்ட ஒரு ஹை டெக் மருத்துவமனை.

டெல்லியில் இயங்கும் எய்ம்ஸ் மருத்துவ  மனை உலகத்தரம் வாயந்தது.  இதில் படிக்க, பணிபுரியம் வாய்ப்பு கிடைப்பது மருத்துவ மாணவர்களின் கனவு. இங்கு வசதியற்றோருக்கு கட்டணமின்றி உயர் தர சிகிச்சைஅளிக்கப்டுகிறது.

இத்தகையை வசதி மிக்க மருத்தவமனைகளையும் இணைந்த கல்லூரிகளையும் இந்தியாவின் பல மாநிலங்களில் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டது.

நீண்ட விவாதங்களுக்கு பின்னர் தமிழக அரசு மதுரையில் தோப்பூர் என்ற இடத்தை தேர்வு செய்து மத்திய அரசுக்கு அளித்திருக்கிறது. .

இந்த எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு பிரதமர் மோடி 2019, ஜனவரி 27ம் தேதி அடிக்கல் நாட்டினார். அப்போது இது ஒன்றிய அரசின் மூலம் தமிழ் நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வசதியாக வர்ணிக்கப்பட்டது. ஆனால் அடிக்கல் நாட்டிய பின்னர் கட்டிடப்பணியில்   எந்த முன்னேற்றமுமில்லை.

அதே நேரம் 2017, அக்டோபரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய, இமாச்சல பிரதேசம், பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி முடிந்து 2022, அக். 5ம் தேதி அவராலேயே திறக்கப்பட்டும் விட்டது. இது ஒன்றிய அரசின் முழு நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. 

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துவங்காததால், நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கலான வழக்கில், ஒன்றிய அரசு தரப்பில் சொல்லப்பட்ட பதில் ஆச்சரியமளிப்பதாக இருந்தது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக, ஜப்பான் கட்டுமான நிறுவனமான ஜிகா குழுவினர், கடந்த 2019ல் ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். திட்ட மதிப்பு ரூ.1,977.8 கோடியாக உயர்ந்துள்ளது. 2022, மார்ச் 21 முதல் அக்டோபர் 2026 வரை கட்டுமான காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கு நீதிபதிகள், அக்டோபர் 2026க்குள் பணிகள் முடியும் என எப்படி தெரிவிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்  அதற்கு காரணம் வழக்கு கடந்தாண்டு  17.8.2021ல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தோடு அறிவிக்கப்பட்ட பிற மாநிலங்களில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் ஏறத்தாழ முடியும் நிலையில் உள்ளன.

இந்தப்பணிகளுக்கான  உத்தரவு கிடைத்த 36 மாதங்களில் கட்டுமான பணிகள் முடிவடையுமென எதிர்பார்ப்பதாக ஒன்றிய அரசுத தரப்பில் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கபட்டது.

இந்த வழக்கில்   கட்டுமானப்பணியை துவங்குவது தொடர்பாக, அடுத்தடுத்து நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.


உத்தரவு வெளியாகி ஓராண்டுக்கு மேலாகியும், எய்ம்ஸ் கட்டுமான பணி எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் கட்டுமானப்பணிக்கு அடிக்கல் நாட்டி 45 மாதங்களை கடந்து விட்டன. பணிகள் தொடங்கியிருந்தால்  சுமார் 70 - 75 சதவீத பணிகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.

ஒரு எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான கால அளவு 36 மாதங்கள், 45 மாதங்கள் ஆகும். அதிகபட்சமாக 60 மாதங்கள். ஆனால், மதுரை தோப்பூரில்  இது வரை நடந்திருக்கும் பணிகள்  முழுமையாக நிறைவடையாத சுற்று சுவர் மட்டுமே.

 இந்த தாமத்திற்காக தமிழக அரசியல் கட்சிகள் எழுப்பிய குரலுக்கு பதிலளிக்கும் விதமாக ஒன்றிய அரசு செய்திருப்பது ஒரு நகைமுரண். மதுரை எயம்ஸ்க்கு ஒரு இயக்குநரை நியமித்தது. கடந்த ஆண்டு மாணவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்..

 தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கான முதலாமாண்டு வகுப்புகள், தற்காலிகமாக ராமநாதபுரத்தில் நடந்து வருகிறது. அதாவது மிக நவீன வசதிகளுடன் கூடைய் சிறப்பு கல்லூரியில்  மருத்துவ தொழில் நுட்பங்களை கற்க தேர்ந்தெடுக்கப்ட்ட அந்த மாணவர்கள் வழக்கமான வசதிகளை மட்டுமே கொண்ட ஒரு மாவட்ட தலைநகர் மருத்துவ மனையுடன் இணைந்த  கல்லூரியில் பயிற்சி பெறுகின்றனர்.

 இந்த மாணவர்கள் இங்கு படிப்பை மாணவர்கள் முடிப்பதற்குள்ளாவது கட்டுமானப்பணிகள் துவங்கப்படுமா ? என்பது தான் இப்போது எழுந்திருக்கும் கேள்வி.

,கடந்த மாத இறுதியில் மதுரை தோப்பூரில் ஆய்வு செய்த குழுவினர், ஓராண்டிற்குள் கட்டுமானப்பணிகள் துவங்குமென தெரிவித்தனர். இதன்படி பார்த்தால் கட்டுமானப்பணிகளை அடுத்த அக்டோபர் மாதத்திற்குள் துவக்க வேண்டும். ஐகோர்ட் கிளையில் தெரிவித்தபடி, 3 ஆண்டுக்குள் முடித்தால் 2026, அக்டோபர் மாதத்திற்குள் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும்.

 ஆனால் நீதிபதிகள் அதற்குள் கட்டுமானப்பணிகளை ஒன்றிய அரசு முடிக்குமா  என்று எழுப்பியிருக்கும் கேள்வி.  தமிழ்நாட்டு மக்கள் மனதில் எதிரொலிக்கும் கேள்வி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com