வின்ஸ்டன் சர்ச்சிலின் நகைச்சுவை குறும்புச் சரங்கள்!
* ஒரு நாள் சர்ச்சிலும் (Winston churchill) அவர் மனைவி கிளெமென்ட்டினும் லண்டன் வீதியில் நடந்து போய் கொண்டிருந்தனர். அப்போது வீதியை பெருக்கி கொண்டிருந்த ஒருவர் சர்ச்சில் மனைவிக்கு 'ஹாய்!' சொல்லி சிறிது நேரம் பேசி விட்டு போனார். பேசிவிட்டு போனவர் தன்னோட பள்ளி தோழன் என்றார் கிளெமெண்ட்டின். இதை கேட்ட சர்ச்சில், 'அவனை நீ கல்யாணம் செய்திருந்தால் ஒரு குப்பை அள்ளுபவன் மனைவியாய் ஆகியிருப்பாய்!' என்றார் கிண்டலாக.
இதை கேட்ட கிளெமெண்ட்டின் சும்மாவா இருந்தாங்க இல்லை. அவர் கொடுத்த சூடான பதில் இதுதான். "நீங்கள் சொல்வது தவறு டார்லிங். என்னை கல்யாணம் செய்திருந்தால், அவர் தான் இன்று பிரதம மந்திரியாக இருந்திருப்பார்". பூசணிக்காய் போல இருக்கும் சர்ச்சிலின் முகம் சுண்டைக்காய் போலாகிவிட்டது.
* இங்கிலாந்து பார்லிமென்டின் உறுப்பினராக இருந்த லேடி அஸ்டர் என்பவருக்கும் சர்ச்சிலுக்கும் ஆகாது. ஒரு சமயம் இந்த லேடி அஸ்டர் சர்ச்சிலை பார்த்து, "நான் மட்டும் உங்களுக்கு வாக்கப்பட்டு இருந்தால், காபியில் விஷம் கலந்து உங்கள் கதையை முடித்திருப்பேன்" என்றார்.
இதற்கு சர்ச்சில், "நீ எனக்கு வாக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் அதை நான் சந்தோஷமாக குடித்திருப்பேன்!" என்றாரே பார்க்கலாம்.
* இரண்டாம் உலக போர் நடந்து கொண்டிருந்த சமயம். சர்ச்சில் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டை சந்திக்க அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் தங்கி இருந்தார். அன்று ரூசெவேல்ட் சர்ச்சிலை காண அவர் தங்கியிருந்த அறைக்கு சென்றார் அப்போது குளித்து கொண்டிருந்த சர்ச்சில் உடை எதுவும் போடாமல் ரூஸ்வெல்ட் முன் வந்து நின்றார். "என்னப்பா! இது கோலம் என்று ரூஸ்வெல்ட் அதிர்ச்சி அடைந்து கேட்க, அதற்கு சர்ச்சில் உங்களிடமிருந்து நான் எதையும் மறைக்கவில்லை என்பதற்காக தான் இப்படி நிற்கிறேன்!" என்று சொல்லி சிரித்தாராம்.
* பெர்னாட்ஷா தன்னுடைய ஒரு நாடகத்தின் முதல் ஷோவுக்கான டிக்கட்டுகள் இரண்டை இணைத்து கடிதம் ஒன்றை சர்ச்சிலுக்கு அனுப்பினார். அதில் "நீங்களும் உங்களுக்கு ஏதேனும் நண்பன் இருந்தால், அவரையும் அழைத்து கொண்டு வரலாம்" என்று கொழுப்பெடுத்து கிண்டலாக எழுதி இருந்தார்.
இதற்கு நாக்கை பிடுங்கி கொள்ளும்படி ஒரு பதில் அனுப்பினார் சர்ச்சில், அந்த பதில் தான் இது. "உங்கள் நாடகத்தின் முதல் நாள் ஷோவுக்கு என்னால் வர முடியாது. அது இரண்டாவது நாள் ஓடினால் பார்க்கலாம். வர முயற்சிக்கிறேன்!"

